ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டங்கள்: கடந்த ஆண்டு 540,000 சிங்கப்பூரர்கள் பலனடைந்தனர்

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்­கப்­பூர் அமைப்பு ஆத­ர­வ­ளித்த திட்­டங்­கள் மூலம் கடந்த ஆண்டு ஏறக்­கு­றைய 540,000 சிங்­கப்­பூ­ரர்­கள் பல­ன­டைந்­த­னர். 2019ஆம் ஆண்­டை­விட இந்த எண்­ணிக்கை 40,000 அதி­கம்.

ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் நேற்று வெளி­யிட்ட அதன் வரு­டாந்­திர மறு­ஆய்வு அறிக்­கை­யில் இந்­தத் தக­வ­லைத் தெரி­வித்­தது. இத்­திட்­டங்­கள் மூலம் கடந்த ஆண்டு 14,000 தொழில் நிறு­வனங்கள் பல­ன­டைந்­தன. 2019ஆம் ஆண்டு­டன் ஒப்­பு­நோக்க, இந்த எண்­ணிக்­கை­யில் மாற்­றம் எது­வும் இல்லை.

தனி­ந­பர்­கள், தொழில் நிறு­வனங்கள் மீது கொவிட்-19 ஏற்­படுத்­திய தாக்­கத்­திற்­குப் பதில் நட­வடிக்­கை­யாக புதிய நடை­மு­றை­கள் செயல்­ப­டுத்­தப்­பட்­ட­தா­க­வும், ஏற்­கெனவே உள்ள திட்­டங்­கள் மாற்றி அமைக்­கப்­பட்­ட­தா­க­வும் ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் தெரி­வித்­தது.

தனி­ந­பர்­க­ளுக்­குப் பயிற்சி வாய்ப்­பு­களை வழங்க ‘எஸ்ஜி யுனை­டெட்’ திறன் மேம்­பாட்­டுத் திட்­ட­மும் ‘எஸ்ஜி யுனை­டெட்’ பணி­ இடைக்­கா­லத் திட்­ட­மும் தொடங்­கப்­பட்­டன.

கடந்த ஆண்டு டிசம்­பர் நில­வரப்­படி, இந்­தத் திட்­டங்­களில் ஏறத்­தாழ 9,800 பேர் சேர்ந்­த­னர்.

தக­வல் தொடர்­புத் தொழில்­நுட்­பம் மற்­றும் ஊட­கம், நிபு­ணத்­து­வச் சேவை­கள், உற்­பத்­தித்­துறை மற்றும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­களைச் சேர்ந்த அதி­க­மா­னோர் இத்­திட்­டங்­களில் சேர்ந்­த­னர்.

கடந்த ஆண்டு 188,000 சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­க­ளது ஸ்கில்ஸ்­ஃபியூச்­சர் உத­வித்­தொ­கை­யைப் பயன்­படுத்­தி­னர். 2019ஆம் ஆண்­டில் 156,000 பேர் இதைப் பயன்­படுத்­தி­யி­ருந்­த­னர்.

கடந்த ஆண்டு ஸ்கில்ஸ்­ஃபியூச்சர் ஆலோ­ச­னைப் பயி­லரங்­கு­கள் ஏறத்­தாழ 22,000 பேருக்குச் சேவை­யாற்­றின. 2019ல் இந்த எண்­ணிக்கை 54,000க்கும் அதி­க­மாக இருந்­தது.

தொழில் நிறு­வ­னங்­கள், குறிப்­பாக சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் மீதும் கவ­னம் செலுத்­தப்­ப­டு­வ­தாக ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் கூறி­யது. வேலை­யிட கற்­ற­லுக்­கான உன்­னத தேசிய நிலை­யம் அறி­மு­கம் கண்­ட­தைத் தொடர்ந்து ஏறக்­குறைய 180 தொழில் நிறு­வ­னங்­கள் ஆண்­டு­தோ­றும் இது­கு­றித்த திட்­டங்­களில் சேர்ந்து வேலை­யிட கற்றல் நடை­மு­றை­க­ளைச் செயல்­படுத்­தின.

ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் தொழில் நிறு­வன உத­வித்­தொகை திட்­டத்­தின்­கீழ் பாடப்­பி­ரி­வு­களில் சேர்ந்து பயிற்சி பெற ஏறக்­கு­றைய 3,400 நிறு­வ­னங்­கள் தங்­க­ளது ஊழி­யர்­களை அனுப்­பி­வைத்­த­ன.

கல்­விக்­க­ழ­கங்­க­ளைப் பொறுத்­த­மட்­டில், தொழில்­நுட்­பக் கல்­விக் கழகம், பல­து­றைத்­தொ­ழிற்­கல்­லூரி, பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் வேலை-கல்­வித் திட்­டங்­களில் தொடர்ந்து பங்­கேற்­ற­தாக ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் கூறி­யது.

கடந்த ஆண்டு 590 நிறு­வ­னங்­கள் இத்­திட்­டங்­களில் பங்­கெ­டுத்­தன. மாண­வர்­கள் கல்­வியை மேற்­கொள்­ளும் அதே வேளை­யில் வேலை அனு­ப­வத்­தைப் பெற 1,700 பேருக்கு வேலைப் பயிற்சி இடங்­களை அந்­நி­று­வ­னங்­கள் வழங்­கின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!