தமிழக விவசாயிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

ஒரு நாள் பய­ண­மாக நேற்­றுக் காலை தமி­ழ­கம் வந்த பிர­த­மர் மோடி, தமி­ழக விவ­சா­யி­க­ளைப் புகழ்ந்து பேசி­யுள்­ளார்.

சென்­னை­யில் உள்ள நேரு உள்­வி­ளை­யாட்டு அரங்­கத்­தில் பல ஆயி­ரம் கோடி ரூபாய் மதிப்­புள்ள நலத்­திட்­டங்­களை தொடங்கி வைத்து அவர் உரை­யாற்­றி­னார்.

அப்­போது, தமி­ழக விவ­சா­யி­கள் நீரா­தா­ரங்­களை சிறப்­பாக பயன் படுத்தி வருவதாக அவர் குறிப் பிட்டார்.

"நீர் மேலாண்­மை­யில் சிறந்து விளங்கி தானிய உற்­பத்­தி­யில் தமி­ழ­கம் சாதனை படைத்­துள்­ளது," என்­று அவர் பாராட்டினார்.

கல்­லணை கால்­வாய் சீர­மைக்கப் பட்டு புதுப்பிக்கப்படுவதால் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்­டங்­கள் பய­ன­டை­யும் என்று கூறிய திரு மோடி, "வரப்­பு­யர நீர் உய­ரும், நீர் உயர நெல் உய­ரும், நெல் உயர குடி உய­ரும், குடி உயர கோல் உய­ரும், கோல் உயர கோன் உயர்­வான்' என்ற ஒள­வை­யார் பாடலை மேற்­கோள் காட்­டி­னார்.

"கொரோனா காலத்­தி­லும் மெட்ரோ ரயில் திட்­டம் குறித்த நேரத்­தில் முடிக்­கப்­பட்­டுள்­ளது. சிறந்த போக்­கு­வ­ரத்து சேவை­கள் வணி­கத்தைப் பெருக்க உத­வும். மின்­ம­ய­மாக்­கப்­பட்ட ரயில் தடங்­கள் டெல்டா மாவட்­டங்­க­ளுக்கு மிகப்­பெ­ரிய வரப்­பி­ர­சா­த­மாக அமை யும்," என்றார்.

'ஆயு­தம் செய்­வோம் நல்ல காகி­தம் செய்­வோம்; ஆலை­கள் வைப்­போம் கல்­விச் சாலை­கள் வைப்­போம்' என்ற மகா­கவி பாரதியின் பாட­லை­யும் பிர­த­மர் சுட்­டிக் காட்­டி­னார்.

பிரதமர் மோடி, 'வணக்கம் சென்னை', 'வணக்கம் தமிழ்நாடு', 'ெசன்னை அறிவும் ஆற்றலும் நிரம்பிய நகரம்' என்று கூறி தமது உைரயைத் தொடங்கியிருந்தார்.

முன்­ன­தாக புதிய 'அர்­ஜூன் மார்க்-1ஏ' ராணுவ பீரங்­கியை அவர் நாட்­டுக்கு அர்ப்­ப­ணித்­தார்.

சென்னை ஆவ­டி­யில் தயா­ரிக்­கப்­பட்ட அர்­ஜூன் பீரங்கி, இரவு, பகல் எந்த நேரத்திலும் இலக்கை துல்­லி­ய­மாக தாக்­கக்கூடியது. 360 டிகிரி சுழன்று தாக்­கும் திறன் கொண்டது. காலை 11 மணி­ய­ள­வில் சென்னை நேப்­பி­யர் பாலம் அரு­கில் உள்ள ஐஎன்­எஸ் அடை­யார் கடற்படை தளத்­துக்கு ஹெலி­காப்­டர் மூலம் வந்த பிர­த­மர் மோடியை ஆளு­நர், முதல்­வர் பழ­னி­சாமி, துணை முதல்­வர் ஓ பன்­னீர்செல்­வம், தமி­ழக பாஜக தலை­வர் எல். முரு­கன், தமி­ழக பாஜக மேலிட பொறுப்­பா­ளர் சி.டி.ரவி ஆகி­யோர் வர­வேற்­ற­னர்.

விழா மேடை­யில் பிர­த­மர் மோடிக்கு பொன்­னாடை அணி வித்து கௌர­வித்த முதல்வர் பழனி­சாமி, அவ­ருக்கு கிருஷ்­ணர் சிலையை நினைவுப் பரி­சாக அளித்­தார்.

மேடையில் வைக்­கப்­பட்­டி­ருந்த முன்­னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெய­ல­‌லி­தா­வின் உருவப் படங்­க­ளுக்கு பிர­த­மர் மோடி மலர்­தூவி மரி­யாதை செலுத்தினார்.

இந்த விழா­வில் துணை முதல்வர் பன்­னீர்­செல்­வம் வரவேற்­பு­ரை­யாற்­றி­னார்.

அடுத்த சில மாதங்­களில் சட்ட மன்­றத் தேர்­தல் நடை­பெ­ற­வி­ருக்­கும் வேளை­யில் தமி­ழ­கம் வந்­துள்­ளார் பிரதமர் மோடி.

நேரு விளை­யாட்­ட­ரங்­கில் தமி­ழக முதல்­வர் பழ­னி­சா­மியை அவர் தனி­யாக அழைத்­துப் பேசி­னார்.

சுமார் பத்து நிமி­டங்­கள் இந்த ஆலோ­சனை நீடித்­தது. அப்­போது துணை முதல்­வர் ஓ. பன்­னீர்­செல்­வம் உடன் இல்லை.

அதி­மு­க­வுக்­கும் பாஜ­க­வுக்­கும் இடையே தொகுதிப் பங்­கீடு குறித்து இரு­வ­ரும் பேசி­யி­ருக்­க­லாம் என்று அர­சி­யல் வட்­டா­ரங்­கள் தெரி­விக் கின்­றன.

பிர­த­மர் மோடி, இம்­மா­தம் 25ஆம் தேதி மீண்­டும் தமி­ழ­கம் வர­வி­ருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!