கொவிட்-19 விதிமுறையை மீறி சந்திப்பு; குற்றத்தை ஒப்புக்கொண்ட தம்பதியர்

கொவிட்-19 விதி­மு­றையை மீறிய தாக பிரிட்­டிஷ் ஆட­வ­ரும் அவ­ரது சிங்­கப்­பூர் மனை­வி­யும் ஒப்­புக்­கொண்­ட­னர்.

52 வயது நைஜல் ஸ்கி­ய­ருக்கு இருக்­கும் கட்­டாய உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு ரிட்ஸ்-கார்ல்­டன் மில்­லே­னியா சிங்­கப்­பூ­ரில் தங்க வைக்­கப்­பட்­ட­னர்.

விதி­மு­றை­யின்­படி அவர் அறை­யை­விட்டு வெளி­யே­றக்­கூ­டாது.

ஆனால் கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் 21ஆம் தேதி­யன்று ஹோட்­ட­லின் 14வது மாடி­யில் இருந்த தமது அறை­யி­லி­ருந்து அவர் முகக்­க­வ­சம் அணி­யா­மல் மூன்று முறை வெளி­யே­றி­ய­தாக அறி­யப்­ப­டு­கிறது.

அதி­காலை 2.20 மணி அள­வில் மூன்­றா­வது முறை­யாக அறை­யி­லி­ருந்து வெளி­யேறி ஸ்கிய, அதே ஹோட்­ட­லின் 27வது மாடி­யில் உள்ள அறைக்­குச் சென்று அங்கு தங்­கியிருந்த தமது காதலியான 39 வயது அகத்தா மகேஷ் ஈய­ம­லை­யைச் சந்­தித்­தார்.

ஹோட்­ட­லின் படி­களில் ஏறி அவர் 14வது மாடி­யி­லி­ருந்து 27வது மாடிக்­குச் சென்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அந்­நே­ரத்­தில் அகத்­தா­வுக்கு வீட்­டி­லேயே இருக்­கும் கட்­டாய உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­ப­ட­வில்லை.

ஸ்கி­ய­ரும் அகத்­தா­வும் கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் திரு­ம­ணம் செய்­து­கொண்­ட­னர்.

தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை அவர்கள் இருவரும் நேற்று ஒப்புக்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக இம்மாதம் 26ஆம் தேதியன்று தீர்ப்பளிக்கப்படும்.

பயணிகள் எந்த நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வருகிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்களுக்கு 14 நாட்கள் அல்லது ஏழு நாட்கள் வீட்டிலேயே இருக்கும் கட்டாய உத்தரவு நிர்ணயிக்கப்படும்.

இந்த உத்தரவை அவர்கள் வீட்டில் அல்லது அரசாங்க கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் இடங்களில் நிறைவேற்ற வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!