200,000 உள்ளூர்வாசிகளை வேலையில் அமர்த்த ஆதரவு

எஸ்ஜி ஒற்றுமை வேலை­கள் மற்­றும் திறன்­கள் தொகுப்­புத் திட்டத்தின்கீழ் இவ்­வாண்டு 200,000 உள்ளூர்வாசிகளுக்கு வேலை வழங்கி ஆத­ரிக்க இலக்கு வகுக்­கப்­பட்டுள்­ளது.

35,000 பயிற்­சி­க­ளையும் பயிற்சி வாய்ப்­பு­களையும் நடப்­பாண்­டில் வழங்­கும் வகை­யில் இந்­தத் தொகுப்­புத் திட்­டம் புதுப்­பிக்­கப்­ப­டு­கிறது. கொவிட்-19 கொள்­ளை­

நோ­யால் ஊழி­யர் சந்தை வீழ்ச்­சி அடைந்­து­வி­டாது தடுக்க கடந்த ஆண்டு தொடங்­கப்­பட்ட இந்­ந­ட­வ­டிக்கை நாட்­டின் தொழில்­துறை உரு­மாற்­றத்­திற்கு அத்­தி­யா­வ­சி­ய­மான ஒன்று.

தொகுப்­புத் திட்­டம் செயல்­ப­டத் தொடங்­கி­ய­து­ மு­தல் கடந்த ஆண்டு இறுதி வரை ஏறக்­கு­றைய 76,000 பேர் வேலை, பயிற்சி, திறன் ப­யிற்சி போன்­ற­வற்­றைப் பெற்­றுள்­ள­னர். இதற்கு வேலை வளர்ச்சி ஊக்­கத்­தொ­கைத் திட்­டம் கைகொ­டுத்­தது. ஆள் நிய­ம­னத்தை நிறு­வ­னங்­கள் மேற்­கொள்ள சம்­பள மானி­யம் வழி இத்­திட்­டம் ஊக்­கு­விக்­கிறது. இத்­திட்­டம் நடப்­புக்கு வந்த இரு மாதங்­க­ளி­லேயே வேலை­தே­டிய 110,000 உள்­ளூர்­வா­சி­க­ளுக்கு இதன் மூலம் பலன் கிட்­டி­யது.

இத­னைத் தொட்­டுப் பேசிய துணைப் பிர­த­மர் ஹெங், “நிறு­வ­னங்­களும் தொழில்­து­றை­யும் உரு­மாற்­றம் கண்­டு­வ­ரும் நிலை­யி­லும் புதிய வளர்ச்சி அம்­சங்­கள் உரு­வெ­டுக்­கும் நிலை­யி­லும் அவற்­றுக்கு ஈடு­கொ­டுக்­கும் வகை­யில் திறன்க­ளை­யும் செயல்­பா­டு­க­ளை­யும் நமது மக்­கள் பெற்­றி­ருப்­பது அவ­சி­யம். மேலும் வலி­மை­யு­டன் மீண்­டெழ நமது மக்­க­ளுக்கு புதிய அறி­வாற்­ற­லும் திறன்­களும் தேவை,” என்­றார்.

வேலை­கள், திறன்­கள் தொகுப்­புத் திட்­டத்­திற்கு இரண்­டா­வது தவ­ணை­யாக $5.4 பில்­லி­யன் கூடு­தல் நிதி ஒதுக்­கப்­ப­டு­வ­தா­க­வும் கடந்த ஆண்டு இதற்கு ஏற்­கெ­னவே ஒதுக்­கப்­பட்ட தொகை $3 பில்­லி­யன் என­வும் அவர் கூறி­னார். இந்த ஒட்­டு­மொத்த ஒதுக்­கீட்­டில் வேலை வளர்ச்சி ஊக்­கத்­தொ­கைத் திட்­டத்­திற்கு $5.2 பி. பயன்­ப­டுத்­தப்­படும். வேலைக்கு ஆள் நிய­மன நட­வ­டிக்­கையை செப்­டம்­பர் 30 வரை ஏழு மாதம் தொடர இது உத­வும்.

தகு­தி­யுள்ள உள்­ளூர்­வா­சி­களை வேலை­யில் நிய­மிக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்கு அவர்­கள் நிய­மிக்­கப்­பட்ட மாதம் முதல் 12 மாதங்­க­ளுக்­கான சம்­பள ஆத­ரவை இந்த விரி­வாக்­கம் அளிக்­கும். அதே­நே­ரம் முதிர்ச்­சி­ய­டைந்­தோர், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், முன்­னாள் சிறைக்­ கைதி­கள் போன்­றோரை வேலைக்கு அமர்த்­தி­னால் 18 மாதங்­க­ளுக்கு மேம்­ப­டுத்­தப்­பட்ட சம்­பள ஆத­ரவை இது வழங்­கும். மேலும், எஸ்ஜி ஒற்­றுமை திறன்­கள், எஸ்ஜி ஒற்­றுமை பயிற்சி, எஸ்ஜி ஒற்­றுமை பணி­யி­டைக்­கால வாழ்க்­கைத்­தொ­ழில் போன்ற திட்­டங்­கள் வேலை­யில் அம­ரு­முன் கூடு­தல் உதவி தேவைப்­படும் ஊழி­யர்­க­ளுக்­கும் நீட்­டிக்­கப்­படும் என்றார் திரு ஹெங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!