புதிதாக 11 பேருக்கு கொவிட்-19

புதிதாக 11 பேருக்கு கொவிட்-19

1 mins read
d70bbb99-3062-43da-9c68-6b28547050e9
-

சிங்கப்பூரில் புதிதாக 11 கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்ட அனைவருமே சிங்கப்பூருக்கு வெளியே கிருமி தொற்றியவர்கள். இவர்கள் அனைவருக்கும் வீட்டில் தங்கும் உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 59, 869.

சமூகத்தில் புதிய கிருமித்தொற்றுகள் ஏற்படவில்லை என்றது சுகாதார அமைச்சு.

இதுவரையில் சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமிப்பரவலால் 29 பேர் மரணம் அடைந்தனர். அத்துடன், கிருமித்தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட 15 பேர் வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.

டிசம்பர் 2019ஆம் ஆண்டில் இக்கிருமிப்பரவல் தொடங்கியது முதல் உலகில் 110 மில்லியனுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இதனால் 2.4 மில்லியனுக்கு அதிகமானோர் உயிரிழந்தனர்.