மலேசியாவில் தரையிறங்கிய முதல் தொகுதி கொவிட்-19 தடுப்பூசிகள்

கொரோனா கிரு­மிக்கு எதி­ரான தடுப்பூசிகளின் முதல் தொகுதி நேற்று காலை செப்பாங்­கில் உள்ள கோலா­லம்­பூர் அனைத்­து­லக விமான நிலை­யத்தை அடைந்­தது. மேலும் சில, நிலம்­வ­ழி­யாக சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து ஜோகூ­ருக்­குள் நேற்று பிற்­ப­கல் வந்­தன.

பெல்­ஜி­யத்­தின் ஃபைசர் ஆலை­யி­லி­ருந்து மொத்­தம் 312,390 தடுப்­பூசி அள­வு­கள், லாய்ப்­சிக், ஜெர்­மனி, சிங்­கப்­பூர் உட்­பட பல இடங்­களில் இடை­யி­டையே நின்று இறுதி­யில் மலே­சி­யாவை அடைந்­தன.

மலே­சி­யா­வில் அமைந்­துள்ள 16 இடங்­களில் தடுப்­பூ­சி­கள் ரக­சி­ய­மாக வைக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து ஜோகூ­ருக்­குள் வரும் தடுப்­பூ­சி­கள், அங்­குள்ள நான்கு ரக­சிய இடங்­களில் வைக்­கப்­படும்.

இதற்­கி­டையே, மலே­சி­யா­வின் கொவிட்-19 தடுப்­பூ­சித் திட்­டத்தை முன்­னெ­டுத்­துச் செல்­லும் பொறுப்­பில் உள்ள அறி­வி­யல், தொழில்­நுட்ப, புத்­தாக்க அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன், தடுப்­பூ­சித் திட்­டத்­தைக் குறித்­துச் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் நேற்று பேசி­யி­ருந்­தார்.

தேசி­யத் தடுப்­பூ­சித் திட்­டம் சற்று முன்­ன­தா­கவே, பிப்­ர­வரி 26ஆம் தேதி முதல் தொடங்­க­வுள்­ள­தாக அவர் கூறி­னார்.

இதன்­படி, பிர­த­மர் முகை­தீன் யாசி­னும் சுகா­தார தலைமை இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்­லா­வும் முத­லில் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­வர் என்று அவர் தெரி­வித்­தார். அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­திற்­குப் பிறகு இரு­வ­ரும் தங்­க­ளின் முதல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­வர் என்­றார்.

தடுப்­பூ­சித் திட்­டத்­தின் முதல் கட்­ட­மாக பெரும்­பா­லும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­களை உள்­ள­டக்­கும் அரை மில்­லி­யன் முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளுக்­குத் தடுப்­பூ­சிப் போட்­டுக்­கொள்ள முன்­னு­ரிமை வழங்­கப்­படும். இதை­ய­டுத்து, தொற்று ஏற்­படும் சாத்­தி­யம் அதி­க­முள்ள நபர்­க­ளுக்­குத் தடுப்­பூசி வழங்­கப்­படும். பிற­ருக்கு அதன் பின்­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும் வாய்ப்பு கிட்­டும். அடுத்த ஆண்டு பிப்­ர­வரி மாதத்­திற்­குள் குறைந்­தது 80% மக்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடு­வதை மலே­சியா இலக்­கா­கக் கொண்­டுள்­ளது.

இதற்­கி­டையே, தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டோ­ருக்கு ‘உல­க­ளா­விய சான்­ற­ளிப்பு’ வழங்­கு­வது குறித்து சிங்­கப்­பூ­ரின் போக்­கு­வரத்து அமைச்­சர் ஓங் யி காங்­கு­டன் மலே­சிய போக்­கு­வ­ரத்து அமைச்­சர் வீ கா சியோங் பேசி­யி­ருப்­ப­தா­கக் கூறப்­பட்­டது. இச்­சான்­ற­ளிப்­பால் இரு நாடு­க­ளுக்­கிடை­யே­யும் வட்­டா­ரத்­தின் மற்ற நாடு­க­ளுக்­கும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் பய­ணம் செய்ய முடி­யும் என்று கூறப்­ப­டு­கிறது.

இத­னால் மலே­சி­யா­வு­டன் வட்­டார நாடு­க­ளின் விமா­னத்­துறை மீண்­டும் தலை­தூக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!