மிதிவண்டி பாதையாக மாறும் சாலைப் பகுதிகள்

2030ஆம் ஆண்டுக்குள் 1,300 கிலோமீட்டருக்கு நீட்டிப்பு

சிங்­கப்­ பூ­ரின் வட­கி­ழக்கு, கிழக்­குப் பகுதி­களில் அமைந்­துள்ள 20க்கும் மேற்­பட்ட சாலை­க­ளின் பகு­தி­களை, மிதி­ வண்டி ஓட்­டு­வ­தற்­கான பாதை­களாக மாற்­றும் சாத்­தி­யம் ஆரா­யப்­பட்டு வரு­கிறது. இந்த அள­வில் நிகழ்த்­தப்­ படும் முதல் ஆய்வு இதுவே என்று கூறப்­ப­டு­கிறது.

அல்­ஜு­னிட் சாலை, பிரா­டல் சாலை, அப்­பர் சிராங்­கூன் சாலை, அப்­பர் பாய லேபார் சாலை, மெக்­பர்­சன் சாலை போன்ற அதி­கம் பயன்­ப­டுத்­தப்­படும் சாலைப்­ப­கு­தி­களும் இந்த ஆய்­வுக்கு உட்­பட்­டவை.

திட்­டம் கைகூடி வந்­தால், அமை­ய­ உள்ள கூடு­தல் பாதை­க­ளு­டன் தற்­போ­துள்ள 460 கிலோ­மீட்­டர் மிதி­வண்­டித் தொலைவு, 2030ஆம் ஆண்­டுக்­குள் 1,300 கிலோ­மீட்­ட­ராக நீட்­டிக்­கப்­படும் என்று நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

சிங்­கப்­பூ­ரின் மிதி­வண்­டிப் பாதைக் கட்­ட­மைப்பை விரி­வு­ப­டுத்­தும் தேசிய திட்­டத்­தின் ஓர் அங்­க­மான இது, மிதி­வண்டி ஓட்­டு­நர்­க­ளுக்கு மேலும் வசதி­யாக, பாது­காப்­பாக அமை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இவ்­வாறு சாலைப் பகு­தி­களை மிதி­வண்­டிப் பாதை­க­ளாக மாற்­று­வது தொடர்­பில் பெரி­த­ள­வில் நடத்­தப்­படும் போக்­கு­வ­ரத்து ஆய்வு இதுவே என்று நிபு­ணர்­கள் கருத்து தெரி­வித்­த­னர்.

வாக­னங்­க­ளின் எண்­ணிக்­கை­யைக் குறைக்­கும் தேச­மாக சிங்­கப்­பூர் மாறும் இலக்கை நோக்­கிச் செல்­வ­தற்கு இத்­திட்­ட­மும் கைகொ­டுக்­கும் என்று நம்­பப்­ப­டு­கிறது.

கிழக்­குப் பகு­தி­யில் மிதி­வண்­டிப் பாதை­களை வடி­வ­மைக்­க­வும் அதன் தொடர்­பான உள்­கட்­ட­மைப்பை உரு­வாக்­க­வும் பொறி­யி­யல் ஆலோ­ச­னைச் சேவை­களை நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நாடு­வ­தாக குத்­தகை ஆவ­ணங்­கள் தெரி­வித்­துள்­ளன.

இப்­பா­தை­களை 2030ஆம் ஆண்­டுக்­குள் உரு­வாக்­கி­டும் திட்­டங்­கள், மூன்று கட்­டங்­க­ளாக மேற்­கொள்­ளப்­படும். இது­போன்ற கட்­ட­மைப்­பு­களை அடுத்த பத்து ஆண்­டு­களில் விரி­வு­ப­டுத்­து­வ­தால் குறிப்­பி­டத்­தக்க அள­வில் ஒரு சில குடி­யி­ருப்பு வட்­டா­ரங்­கள் பல­ன­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அவ்­வ­கை­யில், கேலாங்­கில் கூடு­தலாக 29.5 கிலோ­மீட்­டர் மிதி­வண்­டிப் பாதை­கள், செங்­காங்­கில் 28.3 கிலோ­மீட்­டர், ஹவ்­காங்­கில் 28.2 கிலோ­மீட்­டர், சிராங்­கூ­னில் 27.6 கிலோ­மீட்­டர் என மிதி­வண்­டிப் பாதை­கள் அமை­ய­வுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சாத்­தி­ய­மா­னால் தொழிற்­பேட்டை வட்­டா­ரங்­க­ளான பாசிர் ரிஸ், தெம்­ப­னிஸ், பீஷான் வட்­டா­ரங்­க­ளி­லும் இப்­பா­தை­கள் அமைக்­கப்­ப­ட­லாம்.

திட்­ட­மி­டப்­படும் இப்­பு­திய பாதை­கள், தற்­போ­துள்ள பாதை­க­ளு­டன் ஒழுங்­காக இணைய வேண்­டும் என்று குறிப்­பிட்­டது ஆணை­யம்.

இதற்­காக தற்­போ­துள்ள சாலை­கள், சாலைச் சந்­திப்­பு­கள், வச­தி­கள் போன்­றவை மாற்றி அமைக்­கப்­ப­ட­லாம் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

மிதி­வண்­டிப் பாதைக்­கான திட்­டங்­களால் சுற்­றி­யுள்ள சாலை­க­ளின் போக்கு­வ­ரத்­தில் ஏற்­ப­டக்­கூ­டிய தாக்­க­மும் ஆரா­யப்­படும் என்­றது ஆணை­யம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!