மலேசியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது; முதல் ஆளாக பிரதமர் முகைதீன் யாசின் தடுப்பூசி போட்டுக்கொண்டார்

மலேசியா திட்டமிட்டதற்கு இரு நாட்களுக்கு முன்னதாகவே இன்று (பிப்ரவரி 24) கொவிட்-19 தடுப்பூசி போடும் நடவடிக்கையைத் தொடங்கியபோது, முதல் ஆளாக அந்நாட்டுப் பிரதமர் முகைதீன் யாசின் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார்.

அவரைத் தொடர்ந்து சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

தடுப்பூசியின் ஆற்றல் மீதான மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக முதல் ஆளாக முகைதீன் யாசின் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.

மலேசியா தனது 33 மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 83 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடத் திட்டமிட்டுள்ளது. இப்பணிகள் ஓராண்டு காலத்துக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கட்டத்தில் சுகாதாரத் துறையினருக்கும் முன்களப் பணியாளர்களுக்கும்

தடுப்பூசி போடப்படவுள்ளது. இது ஏப்ரலில் முழுமைப் பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் கட்டமாக, ஏற்கெனவே சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற பாதிப்புக்குள்ளாகும் ஆபத்துடையவர்களுக்கும் 65 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.

மே மாதத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட அந்நாடு திட்டமிட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள், வெளிநாட்டுத் திறனாளர்கள், அகதிகள், சான்றிதழ் இல்லாத குடியேறிகள் உள்ளிட்ட அந்நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 312,390 ‘டோஸ்’ ஃபைசர் - பையோஎன்டெக் தடுப்பூசி மருந்துகள் மலேசியா சென்று சேர்ந்தன. மேலும் 182,520 ‘டோஸ்’ தடுப்பூசி இன்று வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

மலேசியா மொத்தம் 25 மில்லியன் டோஸ் ஃபைசர் - பையோஎன்டெக் தடுப்பூசி மருந்தை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இது 39% மக்களுக்குப் போதுமானது.

அத்துடன் பிரிட்டிஷ்-சுவீடன் மருந்து நிறுவனத்தின் 6.4 மில்லியன் அஸ்ட்ராஸெனகா, 12 மில்லியன் சீனாவின் சினோவாக், 6.4 மில்லியன் ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 ஆகிய தடுப்பூசி மருந்துகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!