வரவுசெலவுத் திட்ட விவாதத்தை முடித்து வைத்துப் பேசியபோது நிதியமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்

வாழ்க்கை, வேலைகள் மேம்பட உற்பத்தித்திறன் வளரவேண்டும்

தங்­க­ளது வளர்ச்­சிக்­கேற்ப ஊழி­யர்­களை நிய­மிக்­கும் வகை­யில் உரு­மா­றும் நிறு­வ­னங்­க­ளின் உற்­பத்­தித்­தி­றன் உயர வேண்­டும் என்­றும் அந்த உயர்­வால் மட்­டுமே சிங்­கப்­பூ­ரர்­க­ளின் வேலை­க­ளை­யும் வாழ்க்­கை­யை­யும் தொடர்ந்து முன்­னேற்ற இய­லும் என்­றும் துைணப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் தெரி­வித்து உள்­ளார்.

மக்­க­ளின் முன்­னேற்­றம்­தான் நாட்­டின் பொரு­ளி­யல் வளர்ச்­சி­யின் அடிப்­படை நோக்­கம் என்­றும் அவர் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் குறிப்­பிட்­டார். வர­வு­செ­ல­வுத் திட்ட அறிக்கை மீதான கருத்­து­களை வெளிப்­ப­டுத்­திய உறுப்­பி­னர்­க­ளுக்கு திரு ஹெங் பதி­ல­ளித்­துப் பேசி­னார்.

“நாடு உட­னடி சவால்­க­ளைச் சமா­ளித்து வரும் சூழ­லி­லும் சிங்­கப்­பூ­ரின் இடைக்­கால, நீண்­ட­கால பொரு­ளி­ய­லுக்­குத் தொடர்ந்து முன்­னு­ரிமை அளிக்­கப்­ப­டு­கிறது. அத­னைத் தழு­வியே அடுத்த மூன்­றாண்­டு­க­ளுக்கு ஊழி­யர்­களும் வர்த்­த­கங்­களும் உரு­மாற்­றம் காண $24 பில்­லி­யன் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. மேலும், உல­கச் சந்­தை­யில் சிங்­கப்­பூ­ரின் ஊழி­யர்­களும் நிறு­வ­னங்­களும் தனித்­து­வ­மான பலனை பெற­வும் இந்­ந­ட­வ­டிக்கை உத­வும்,” என்­றார் நிதி அமைச்­ச­ரு­மான திரு ஹெங்.

அங் மோ கியோ குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் டாக்­டர் கோ போ கூன் உள்­ளிட்ட பல உறுப்­பி­னர்­கள் ஊழி­யர், நிறு­வ­னங்­க­ளுக்கு இடை­யி­லான ஒத்­து­ழைப்பு குறித்து முக்­கி­ய­மா­கக் குறிப்­பிட்­டுப் பேசி­னர். அவர்­க­ளின் கருத்தை ஒத்­துக்­கொண்ட திரு ஹெங், நிறு­வ­னங்­க­ளுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் இடை­யி­லான தற்­போ­தைய நல்­லு­றவு முன்­னெப்­போ­தும் இல்­லாத வகை­யில் பிரிக்க முடி­யாத வகை­யில் அமைந்­தி­ருப்­ப­தா­கச் சொன்­னார்.

அதே­போல ஈஸ்ட் கோஸ்ட் குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் ஜெசிகா டான் உள்­ளிட்ட உறுப்­பி­னர்­க­ளின் கருத்தை ஒட்­டிப் பேசிய துணைப் பிர­த­மர், வலு­வான சிங்­கப்­பூர் மூலா­தா­ரத்­தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வது என்­பதே அர­சாங்­கத்­தின் அணு­கு­மு­றை­யில் இடம்­பெற்­றுள்ள அடிப்­படை அம்­சம் என்­றார்.

தொழிற்­சங்க நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஒன்­றி­ணைந்து வலு­வாக இயங்­கு­தல் என்­னும் போக்கை வலு­வு­டன் மீண்­டெ­ழு­தல் என்­பதை நோக்கி சிங்­கப்­பூர் முன்­னோக்­கிச் செல்­வது குறித்து கருத்­து­களை வெளிப்­ப­டுத்­தி­னர். அப்­போது பேசிய திரு ஹெங், “நமது ஒட்­டு­மொத்­தத் திறன்­கள் மற்­றும் ஒற்­று­மை­யின் வலுவே ஒரு பொரு­ளி­யல் நாடாக, ஒரு சமூ­க­மாக எவ்­வ­ளவு காலத்­துக்கு நாம் முன்­னே­றிச் செல்­வோம் என்­ப­தைத் தீர்­மா­னிக்­கும்,” என்­றார்.

“கொவிட்-19 கொள்­ளை­நோ­யும் புதி­ய­வ­கைக் கிரு­மிப் பர­வ­லும் உல­கப் பொரு­ளி­ய­லில் நிச்­ச­ய­மற்ற தன்­மை­யை­யும் சிக்­கல்­க­ளை­யும் உரு­வாக்கி வரும் வேளை­யில் சிங்­கப்­பூ­ரின் கிரு­மிப் பர­வல் நிலைமை கட்­டுக்­குள் உள்­ளது. சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் படிப்­ப­டி­யாக மீளும். வெவ்­வேறு துறை­கள் வெவ்­வேறு வளர்ச்­சி­யைக் காணும். 2021ல் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யின் வளர்ச்சி 4 விழுக்­காட்­டுக்­கும் 6 விழுக்­காட்­டுக்­கும் இடைப்­பட்டு இருக்­கும் என்று கணிக்­கப்­பட்டு உள்­ளது,” என்­றும் திரு ஹெங் கூறி­னார்.

செல்வ வரி உயர்வு பரிசீலனை

சிங்­கப்­பூ­ரின் செல்வ வரி­களை மேலும் மறு­ஆய்வு செய்ய வாய்ப்பு உள்­ள­தா­க­வும் அது­போன்ற தீர்­வை­களை புகுத்­து­வது ஜிஎஸ்டி (பொருள் சேவை வரி) உயர்த்­தப்­ப­டு­வ­தற்கு மாற்­றாக அமை­யாது என்­றும் திரு ஹெங் தெரி­வித்­துள்­ளார்.

செல்வ வரி­களை உயர்த்­து­வது தொடர்­பாக உறுப்­பி­னர்­கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்த அவர், “இது­போன்ற வரி­கள் சிங்­கப்­பூ­ருக்­குப் புதி­தல்ல. காலம் கால­மாக செல்­வம் தொடர்­பான வரி­க­ளின் அடுத்­த­டுத்த நிலை உயர்த்­தப்­பட்டு வந்­துள்­ளது,” என்­றார்.

வரவுசெலவுத் திட்ட விவாதத்தை முடித்து வைத்து துணைப் பிரதமர் ஹெங் உரை

ஜிஎஸ்டி உயர்வின் அவசியம்

சுகாதாரப் பராமரிப்பு போன்ற முக்கிய அம்சங்களிலும் மேலும் கூடுதலான சமூகப் பாதுகாப்பு கட்டமைப்புகளிலும் உயர்ந்து வரும் செலவுகளை ஈடுகட்ட ஜிஎஸ்டி உயர்த்தப்பட வேண்டி உள்ளது. 2011 நிதி ஆண்டில் $3.9 பில்லியனாக இருந்த சுகாதாரப் பராமரிப்புக்கான வருடாந்திர செலவு, 2019ஆம் ஆண்டில் $11.3 பில்லியனாக உயர்ந்துவிட்டது.

வேலை பாதுகாப்பு என்பது...

வேலை பாதுகாப்பு என்பது வேலைத்திறனோடு நீடிப்பதைக் குறிக்குமே தவிர ஒரே வேலையில் நீடிப்பதைக் குறிக்காது. பொதுமக்கள் புதிய திறன்களைப் பெறவும் எதிர்கால வேலைகளுக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளவும் உகந்த நிலைகளை அரசாங்கம் தொடர்ந்து பலப்படுத்தும்.

‘கொவிட் தலைமுறை’ தவிர்ப்பு

2019ஆம் ஆண்டின் நிலவரத்தோடு ஒப்பிடுகை யில் முழுநேர நிரந்தர வேலைவாய்ப்பு கிட்டத் தட்ட 10 விழுக்காடு குறைந்தபோதிலும் இந்த ஆண்டில் உயர் கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறுவோருக்கான ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு கடந்த ஆண்டுகளைப் போலவே உள்ளது. தன்னாட்சி பல்கலைக்கழகப் பட்டதாரிகளில் 94 விழுக்காட்டினர் கடந்த ஆண்டு ஆறு மாதங் களில் வேலையில் அமர்ந்தனர். 2019ல் இது 91 விழுக்காடாக இருந்தது. மனித மூலதனத்தைப் பாதுகாத்து அவர்களின் வேலைத்திறனை உயர்த்தியதன் மூலம் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ‘கொவிட் தலைமுறை’ உருவாகாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!