கொவிட்-19 கட்டுப்பாடுகளால் குறைவான எண்ணிக்கையில் புதிய குடிமக்கள், நிரந்தரவாசிகள்

கொவிட்-19 கட்டுப்பாடுகளால் குறைவான எண்ணிக்கையில் புதிய குடிமக்கள், நிரந்தரவாசிகள்

2 mins read
e56c7485-455b-4d23-95e6-a00b6e865766
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு 21,000 பேருக்கு புதிய சிங்­கப்­பூர் குடியுரிமையும் 27,500 பேருக்கு சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சத் தகு­தி­யும் வழங்­கப்­பட்­டது.

புதிய சிங்­கப்­பூர் குடி­மக்­களில் வெளி­நாட்­டில் சிங்­கப்­பூர் பெற்­றோ­ருக்­குப் பிறந்த 1,300 குழந்­தை­களும் அடங்­கும்.

இந்த விவ­ரங்­களை நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் வெளி­யிட்டு பேசிய பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா, கொவிட்-19 கிரு­மித்­தொற்­றின் தொடர்­பில் அறி­விக்­கப்­பட்ட பய­ணக் கட்­டுப்­பா­டு­கள், நடை­முறை விவ­கா­ரங்­கள் கார­ண­மாக மேற்­கண்ட புள்ளி விவ­ரங்­கள் குறைந்­தன என்­றார்.

சுமார் 31,700 பேருக்கு சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சத் தகு­தி­யும் 22,100 பேருக்கு சிங்­கப்­பூர் குடி­யு­ரி­மை­யும் 2015 முதல் 2019 வரை ஒவ்­வோர் ஆண்­டும் சரா­ச­ரி­யாக வழங்­கப்­பட்டு வந்­தன.

அதில் அந்­தக் கால­கட்­டத்­தில் வெளி­நாட்­டில் சிங்­கப்­பூர் பெற்­றோ­ருக்­குப் பிறந்த 1,600 குழந்­தை­களும் அடங்­கும்.

பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளால், சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சத் தகு­திக்­கும் சிங்­கப்­பூர் குடி யுரி­மைக்­கு­மான கடை­சிக் கட்ட பதி­வுக்­குக் குறை­வான இடங்­களே ஒதுக்­கப்­பட்­டன.

அதற்கு விண்­ணப்­ப­தா­ரர்­கள் நேர­டி­யா­கச் செல்ல வேண்­டும் என்­பதே கார­ணம்.

அத­னால், கொள்கை அள­வில் ஒப்­பு­தல் பெற்ற விண்­ணப்­ப­தா­ரர்­கள் கடந்த ஆண்டு இறு­திக்­குள் அந்த விண்­ணப்­பத்­துக்­கான முழு­மை­யான முறை­களை நிறைவு செய்ய முடி­யா­மல் போனது என்­றும் அமைச்­சர் விளக்­கி­னார்.

"கொவிட்-19 நிலை­மை­யைப் பொறுத்து இந்த விண்­ணப்­ப­தா­ரர்­க­ளுக்கு சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சத் தகு­தி­யும் சிங்­கப்­பூர் குடி­யு­ரி­மை­யும் வரும் மாதங்­களில் வழங்­கப்­படும்.

"அர­சாங்­கம் தொடர்ந்து குடி­நு­ழைவு நடை­மு­றை­க­ளின் வேகத்­தைக் கவ­ன­மாக வழி­ந­டத்­தும். குடி­யே­றி­கள் எவ்­வாறு சிங்­கப்­பூ­ருக்­குப் பங்­க­ளிக்க முடி­யும் என்­பதை மட்­டும் பார்க்­கா­மல், அவர்­கள் சிங்­கப்­பூர் மக்­க­ளு­டன் எவ்­வாறு ஒருங்­கி­ணைய முடி­யும் என்­பதும் ஆரா­யப்­படும்," என்­றும் அமைச்­சர் இந்திராணி ராஜா விளக்கம் அளித்தார்.