சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகத்துக்கு எதிராக அவதூறு பரப்பியதாக வழக்கறிஞர் எம். ரவி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்டது.
தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக்கொண்ட திரு ரவி, அமைச்சர் சண்முகத்துக்கு எதிராக ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட பதிவை அகற்றியுள்ளார்.
திரு ரவிக்கு எதிராக வழக்கு தொடரப்போவதில்லை என்று முடிவெடுத்த நீதிமன்றம் அவருக்கு நிபந்தனையுடனான எச்சரிக்கை விடுத்தது.
நிபந்தனையின்படி அமைச்சர் சண்முகத்துக்கு எதிராக அவதூறு பரப்பும் பதிவை திரு ரவி அகற்ற வேண்டும்.
அதன் பிறகு மன்னிப்புக் கடிதம் ஒன்றை பதிவிட வேண்டும்.
மீண்டும் இத்தகைய செயல்களில் ஈடுபடக்கூடாது என்று திரு ரவிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

