தடுப்பூசி போட விரையும் நாடுகள்; தயாரிப்பில் வேகம் காட்டும் இந்தியா

தடுப்பூசி போட விரையும் நாடுகள்; தயாரிப்பில் வேகம் காட்டும் இந்தியா

3 mins read

வர­லாற்­றி­லேயே மிகப் பெரிய தடுப்­பூசி இயக்­கம் உல­கில் தற்­போது நடந்து வரு­கிறது. புளும்­பெர்க் நிறு­வ­னத்­தின் தர­வு­க­ளின்­படி, 108 நாடு­களில் 265 மில்­லி­ய­னுக்­கும் அதி­க அள­வி­லான தடுப்­பூ­சி­கள் இது­வ­ரை­ போடப்­பட்­டுள்­ளன.

அண்­மைய விகி­தத்­தின்­படி ஒரு நாளைக்கு கிட்­டத்­தட்ட 6.14 மில்லி யன் அளவு தடுப்­பூசி மருந்து போடப்­ப­டு­கிறது. இந்த ஆண்­டின் நடுப்பகுதிக்குள் பெரும்­பா­லான மக்­க­ளுக்­குத் தடுப்­பூசி போட நாடு­கள் முயற்சி எடுத்து வரு­கின்றன.

அமெ­ரிக்கா, நாட்­டி­லுள்ள பெரி­ய­வர்­கள் அனை­வ­ருக்­கும் போது­மான தடுப்­பூசி மருந்தை வரும் மே மாத இறு­திக்­குள் பெற்­றி­ருக்­கும் என்று அதி­பர் ஜோ பைடன் கூறி­யுள்­ளார்.

ஃபைசர், மொடர்னா ஜான்­சன்& ஜான்­சன் ஆகிய மூன்றுவித தடுப்­பூசி­கள் உள்ள நிலை­யில், 100 நாட்­களில் 100 மில்­லி­யன் தடுப்­பூசி அளவை வழங்­கு­வ­தற்­கான தனது இலக்கை நாடு அடை­யும் என்று தான் நம்­பு­வ­தாக அவர் கூறி­னார்.

தடுப்­பூ­சி­க­ளைப் பெற்­ற­தும் அமெ­ரிக்­கர்­கள் அத­னைப் பயன்­படுத்­திக்­கொள்­வதே முக்­கி­யம் என்ற அவர், "எவ்­வ­ளவு பேர் தடுப்­பூசி பெறு­கி­றார்­களோ அவ்­வ­ளவு விரை­வாக கிரு­மிப் பர­வலைச் சமா­ளிக்க முடி­யும்," என்­றார்.

அமெ­ரிக்­கா­வில் கொரோனா கிரு­மி­யால் 2020ஆம் ஆண்­டில் 515,000க்கும் அதி­கமான மர­ணங்­கள் ஏற்­பட்­டன. அங்கு இது­வ­ரை­ 22 விழுக்­காட்­டி­ன­ருக்கு தடுப்­பூசி போட்­டுள்­ளது.

இங்­கி­லாந்து 'சீரம் இன்ஸ்­டி­டி­யூட் ஆப் இந்­தியா' தயா­ரித்த 10 மில்­லி­யன் ஆஸ்ட்­ரஸெ­னெகா தடுப்­பூசி அளவை பெறும் என்று அந்­நாடு செவ்­வாய்க்­கி­ழமை கூறி­யது.

உல­கின் மிகப்­பெ­ரிய தடுப்­பூசி உற்­பத்­தி­யா­ள­ரான இந்­நி­று­வ­னம், ஆக்ஸ்­ஃபர்ட் பல்­க­லைக்­க­ழ­கம் உரு­வாக்­கிய ஆஸ்ட்­ரஸெ­னெகா தடுப்­பூ­சியை ஏரா­ள­மான ஏழை, நடுத்­தர வரு­மான நாடு­க­ளுக்­காக பெரு­ம­ள­வில் உற்­பத்தி செய்­கிறது.

உலக சுகா­தார நிறு­வ­னம் அடுத்த மூன்று மாதங்­களில் 140க்கும் மேற்­பட்ட குறைந்த, நடுத்­தர வரு­மான நாடு­க­ளுக்கு 238 மில்­லி­யன் தடுப்­பூசி மருந்­து­களை விநி­யோ­கிக்­கத் திட்­ட­மிட்­டுள்­ளது.

இந்த நிறு­வ­னத்­தின் 'கோவாக்ஸ்' திட்­டத்­தில் பங்­கு­பெ­றும் 92 ஏழை நாடு­க­ளுக்­குத் தடுப்­பூ­சி­கள் இல­வ­ச­மாக வழங்­கப்­படும்.

சீனா ஜூன் மாதத்­திற்­குள் அதன் மக்­கள் தொகை­யில் 40 விழுக்­காட்­டி­ன­ருக்கு தடுப்­பூசி போட திட்­ட­மிட்­டுள்­ள­தாக அந்­நாட்டு சுகா­தார வல்­லு­நர்­கள் கூறி­னர். பிப்­ர­வரி கடைசி நில­வ­ரப்­படி 52.52 மில்­லி­யன் அளவு தடுப்­பூ­சி­போ­டப்­பட்­டுள்­ள­தாக தேசிய சுகா­தார ஆணை­யத்­து­டன் இணைக்­கப்­பட்ட வல்­லு­நர்­கள் குழு­வின் தலை­வர் ஜாங் நன்­ஷன் கூறி­னார்.

கிட்­டத்­தட்ட 1.4 பில்­லி­யன் மக்­கள்­தொ­கை­யைக் கொண்ட சீனா, மற்ற நாடு­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது தடுப்­பூசி போடு­வ­தில் மெது­வா­கவே செயல்­ப­டு­கிறது. இது­வரை 100 பேருக்கு 3.56 அளவு என்ற விகி­தத்­தி­லேயே தடுப்­பூசி போடப்­பட்டு வரு­கிறது என்று ஜாங் சொன்­னார்.

அதன் மக்­கள்­தொ­கைக்கு போது­மான தடுப்­பூசி உள்­ளது. எனி­னும் அரை பில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான அளவை வெளி­நா­டு­க­ளுக்கு வழங்­கு­வ­தாக சீனா உறு­தி­ய­ளித்­துள்­ளது. இது உள்­நாட்­டில் வழங்­கப்­பட்ட எண்­ணிக்­கையை விட 10 மடங்கு அதி­கம் என்று அந்­நாட்டு வல்­லு­நர்­கள் கூறி­னர்.

தடுப்­பூசி போடு­வ­தில் மிக வேக­மாக இயங்­கும் நாடாக இஸ்­ரேல் உள்­ளது. இங்கு 100 பேருக்கு 94 அளவு என்ற விகி­தத்­தில் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யா­வில் இது­வரை 156,207,49 பேருக்கு கொரோனா தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தாக இந்திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. அங்கு கோவி­ஷீல்டு, கோவாக்­சின் ஆகிய தடுப்­பூ­சி­கள் போடப்­ப­டு­கின்­றன. ஜனவரி 16ஆம் தேதி முதல் முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும் சுகாதாரத் துறையினருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

தற்­போது இரண்­டாம் கட்­ட­மாக 60 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்­கும், 45 வய­துக்கு மேற்­பட்ட இணை நோய் உள்­ள­வர்­க­ளுக்­கும் தடுப்­பூசி செலுத்­தப்­ப­டு­கிறது.

உள்­நாட்­டுத் தேவைக்­கும் வெளி­நா­டு­க­ளுக்­கும் தடுப்­பூசி மருந்தை மில்­லி­யன் கணக்­கான அள­வில் மிக வேக­மா­கத் தயா­ரித்து வரும் இந்­தி­யாவை உலக சுகா­தார நிறு­வ­னம் பாராட்­டி­யுள்­ளது.

உலக அள­வி­லான உற்­பத்­தி­யா­ள­ரா­க­வும், கொவிட்-19 தடுப்­பூசி­யின் கண்­டு­பி­டிப்­பா­ள­ரா­க­வும் இந்­தியா தனது திற­னைக் காட்­டி­யுள்­ளது என்று உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் தலைமை அறி­வி­ய­லா­ள­ரான சௌமியா சுவா­மி­நா­தன் கூறி­யுள்­ளார்.