'பிரமோஸ்' ஏவுகணை வாங்குகிறது பிலிப்பீன்ஸ்

'பிரமோஸ்' ஏவுகணை வாங்குகிறது பிலிப்பீன்ஸ்

1 mins read

இந்­தி­யா­வி­ட­மி­ருந்து பிர­மோஸ் ஏவு­க­ணை­களை பிலிப்­பீன்ஸ் வாங்­க­வுள்­ளது. அந்­நாட்­டின் தற்­காப்­புத் துணை அமைச்­சர் ரேமண்ட் எலி­ஃபாண்­டே­யும் இந்­திய தூதர் ஷாம்பு கும­ரனும் செவ்­வாய்க்­கி­ழமை பிலிப்­பீன்ஸ் ஆயு­தப்­ப­டைத் தலை­மை­ய­க­மான அகுவி­னா­டோ­முகாமில் இந்த அம­லாக்க ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­ட­தாக பிலிப்­பீன்ஸ் தேசிய தற்­காப்­புத் துறை­யின் ஃபேஸ்புக்­கில் தெரி­வித்­துள்­ளது. இந்த ஒப்­பந்­தம் இந்­தி­யா­வி­ட­மி­ருந்து தற்­காப்புச் சாத­னங்­களை வாங்­கு­வது தொடர்­பா­னது.

இந்­தியா- ரஷ்யா கூட்­டுத்­த­யா­ரிப்­பான பிர­மோஸ், கட­லோரப் பாது­காப்பை அதி­க­ரிக்­கும் என்று நம்பு ­வ­தாக பிலிப்­பீன்ஸ் தெரி­வித்து. இது நீர்­மூழ்­கிக் கப்­பல்­கள், கப்­பல்­கள், விமா­னங்­கள் அல்­லது நிலத்­தி­லி­ருந்து ஏவக்­கூ­டிய நடுத்­தர தூர சூப்­பர்­சோ­னிக் (ஒலி­யின் வேகத்தை விட வேக­மாக) ஏவு­கணை. இது உல­கின் அதி­வேக சூப்­பர்­சோ­னிக் ஏவு­க­ணை­யாக கரு­தப்­ப­டு­கிறது.