ரவிக்கு நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கை; வழக்கு மீட்பு

ஃபேஸ்புக் பதிவு ஒன்­றில் சட்ட, உள்­துறை அமைச்­சர் சண்­மு­கத்­துக்கு எதி­ராக அவ­தூறு பரப்­பி­ய­தாக வழக்­க­றி­ஞர் ரவி மீது பதிவு செய்­யப்­பட்ட குற்­ற­வி­யல் அவ­தூறு வழக்கு மீட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்ளது. திரு ரவி­யின் ஃபேஸ்புக் பதிவு மீட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­து­டன் அவர் மன்­னிப்­புக்­கேட்­ட­தா­க­வும் கூறப்­படுகிறது.

திரு ரவிக்கு எதி­ரான குற்­ற­வியல் அவ­தூறு வழக்கு மீட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­தா­க­வும் அதற்குப் பதி­லாக அவ­ருக்கு நிபந்­த­னை­யு­டன் கூடிய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் நேற்று அரசு தலைமை சட்ட அதி­காரி அலு­வ­ல­கம் வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது.

திரு ரவி­யின் வழக்­க­றி­ஞர் முன்­வைத்த வாதங்­களை ஏற்­றுக்­கொண்டு இது குறித்து தீர ஆலோ­சித்த பின் இந்த முடிவு எடுக்­கப்­பட்­ட­தாக தலைமை சட்ட அதி­காரி அலு­வ­ல­கம் விளக்­கி­யது.

இதில் தனது ஃபேஸ்புக் பதிவை மீட்­டுக்ெ­காள்­வ­து­டன், அதற்­காக மன்­னிப்­புக் கேட்­டுக்­கொண்டு இனி இது­போன்ற அவ­தூறு குற்­றச்­சாட்­டு­களை அமைச்­சர் மீது சுமத்­து­வ­தில்லை என்­றும் வழக்­க­றி­ஞர் ரவி உறு­தி­ய­ளித்­துள்­ளார்.

திரு ரவி மீது சென்ற ஆண்டு டிசம்­பர் 16ஆம் தேதி குற்­ற­வி­யல் அவ­தூறு வழக்கு பதிவு செய்­யப்­பட்­டது. இந்­தக் குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் திரு ரவிக்கு இரண்டு ஆண்டு சிறை, அப­ரா­தம் அல்­லது இரண்­டுேமா விதிக்­கப்­ப­ட­லாம்.

அரசு தலைமை சட்ட அதி­காரி அலு­வ­ல­கத்­தின் அறிக்­கை­யின்­படி, திரு ரவி தனது பதிவை பிப்­ர­வரி 25ஆம் தேதி மீட்­டுக்­கொண்­டார்.

"திரு ரவி எழுத்து மூல­மாக மன்­னிப்­புக் கேட்­டுக்­கொண்­ட­து­டன் இது­போல் இனி பதி­வி­டு­வது இல்லை என உறு­தி­யும் அளித்­தார். அதில் தமது பதிவு பொய்­யா­னது என்­றும் அதற்கு எவ்­வித அடிப்­படை­யும் இல்லை என்­ப­தை­யும் அவர் ஒப்­புக்­கொண்­டுள்­ளார்," என அந்த அறிக்கை விளக்­கி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!