பெண்களுக்கு உதவ மக்கள் செயல் கட்சி மகளிர் அணிக்குக் கீழ் இரண்டு புதிய குழுக்கள்

பெண்களுக்கு உதவ மக்கள் செயல் கட்சி மகளிர் அணிக்குக் கீழ் இரண்டு புதிய குழுக்கள்

1 mins read
ee67d539-6582-4463-ab65-715b759ef20e
சிங்கப்பூரில் உள்ள பெண்களுக்கு உதவ மக்கள் செயல் கட்சியின் மகளிர் அணி இரண்டு குழுக்களை அமைத்துள்ளது. (இடமிருந்து வலம்) திருவாட்டி சுன் சூலிங், திருவாட்டி இயோ வான் லிங், மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ, என்டியுசி தலைவர் மேரி லியூ, திருவாட்டி சிம் ஆன். படம்: சாவ்பாவ் -

சிங்கப்பூரில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காண உதவும் வகையில் மக்கள் செயல் கட்சியின் மகளிர் அணி இரண்டு புதிய குழுக்களை அமைக்கவிருக்கிறது.

பெண்களுக்கு உதவ வழிவகைகளைக் கண்டறிய ஆயுவு நடத்தப்படுவதோடு கொள்கை ரீதியாகவும் பரிந்துரைகள் முன்வைக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ இன்று தெரிவித்தார்.

மக்கள் செயல் கட்சி மகளிர் அணியின் தலைவராகவும் அமைச்சர் டியோ பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆய்வு நடத்தும் குழுவுக்கு பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இயோ வான் லிங் தலைமை தாங்குகிறார்.

வீட்டில் இருந்தபடி வேலை செய்வது போன்ற புதிய நடப்புகளும் அவற்றால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் குழு ஆய்வு நடத்தும்.

தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பான புதிய பதிவு விதிமுறை, மூன்று வகை பாலியல் குற்றங்களுக்கான தண்டனை கடுமையாக்கப்படுவது போன்ற விவகாரங்கள் குறித்தும் பெண்களிடையே நிலவும் கருத்துகளை இக்குழு கேட்டறியும் என்று தெரிவிக்கப்பட்டது.

கொள்கை ரீதியான பரிந்துரைகளை முன்வைக்கும் குழுவுக்கு மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி ஹானி சோ தலைமை தாங்குவார்.