மேலும் 13 பேருக்கு கொரோனா; சமூக அளவில் ஒருவருக்குப் பாதிப்பு

மேலும் 13 பேருக்கு கொரோனா; சமூக அளவில் ஒருவருக்குப் பாதிப்பு

1 mins read
a1386ef3-0b34-4b25-9713-f807e511a770
சிங்கப்பூரில் இன்று நண்பகல் நிலவரப்படி மேலும் 13 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று நண்பகல் நிலவரப்படி மேலும் 13 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 60,020ஆக அதிகரித்துள்ளது.

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் 12 பேர் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.

அவர்கள் சிங்கப்பூர் வந்ததும் அவர்களுக்கு வீட்டிலேயே இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.

ஒருவருக்கு சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

நேற்று புதிதாக ஒன்பது பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.

இவர்களிடம் கிருமித்தொற்றுக்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இவர்களில் மூவர் சார்ந்திருப்போருக்கான அட்டை வைத்திருப்பவர்கள்.

இவர்கள் பங்ளாதேஷ், இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தனர்.

நீண்டகால குடியுரிமை அட்டை வைத்திருக்கும் தென்னாப்பிரிக்கர் ஒருவரும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்.

வொர்க் பாஸ் வைத்திருந்த இருவரும் பாதிக்கப்பட்டனர்.

அவர்கள் இந்தியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தனர்.

வேலை அனுமதி அட்டை வைத்திருந்த இருவருக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தனர்.

அவர்களில் ஒருவர் வெளிநாட்டுப் பணிப்பெண்ணாக சிங்கப்பூரில் பணிபுரிவதாக சுகாதார அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்