இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு ஆஸ்திரேலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு ஆஸ்திரேலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு

1 mins read
5ec5d919-5cef-4797-945b-9d15182ecc26
ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் நாடியுள்ள இலங்கைத் தமிழ்க் குடும்பத்துக்கு பிரஸ்பன் நகரில் உள்ள கிங் ஜார்ஜஸ் சதுக்கத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு தெரிவித்த ஆஸ்திரேலியர்கள். படம்: இபிஏ -

இலங்கையிலிருந்து தப்பித்து ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் நாடும் தமிழ்க் குடும்பத்துக்கு ஆஸ்திரேலியர்கள் பலர் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு தெரிவித்தனர்.

நடேஸ் முருகப்பன்-பிரியா தம்பதியருடன் அவர்களது மகள்களான 5 வயது கோபிகா, 3 வயது தர்னிகா ஆகியோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை விடுவித்து ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதி வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பிரஸ்பன் நகரில் உள்ள கிங் ஜார்ஜஸ் சதுக்கத்தில் ஆஸ்திரேலியர்கள் பலர் மெழுகுவர்த்திகளுடன் ஒன்று கூடினர்.