விதிமுறை மீறியவருக்கு சிங்கப்பூரில் வேலை செய்யத் தடை

விதிமுறை மீறியவருக்கு சிங்கப்பூரில் வேலை செய்யத் தடை

1 mins read
b2178358-67df-4d9f-81df-70714813ab68
ஐந்து பேருக்கு மேற்பட்டோர் ஒரே இடத்தில் ஒன்றுகூடுதல் தடை விதிமுறை நடப்பில் இருந்தபோது லஸாரஸ் தீவுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் படகு ஒன்றில் ஒன்பது பேருடன் இருந்த ஏமி கிரேஸ் ரொப்னர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், பு ஹியூ யான் ஃபேஸ்புக் -

கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறையை மீறிய பிரிட்டிஷ் பெண்ணுக்கு சிங்கப்பூரில் வேலை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐந்து பேருக்கு மேற்பட்டோர் ஒரே இடத்தில் ஒன்றுகூடுதல் தடை விதிமுறை நடப்பில் இருந்தபோது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதியன்று லஸாரஸ் தீவுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் படகு ஒன்றில் ஒன்பது பேருடன் இருந்தார் 28 வயது ஏமி கிரேஸ் ரொப்னர்.

அப்போது படகில் இருந்த பத்து பேரும் முகக்கவசம் அணியவில்லை.

ரொப்னரின் வொர்க் பாஸை அவரது முதலாளி ஏற்கெனவே ரத்து செய்துவிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் மனிதவள அமைச்சு கூறியது.

பாதுகாப்பான இடைவெளி விதிமுறையைக் கடைப்பிடிக்க தவறிய குற்றத்துக்காக ரொப்னருக்கும் சிங்கப்பூர் நிரந்தரவாசியான 30 வயது மார்க் லாவ் சான் மாவுக்கும் $3,000 அபராதம் விதிக்கப்பட்டது.