புற ஊதா கதிரியக்கம் அதிகம்: மக்களுக்கு அச்சம் தேவையில்லை

புற ஊதா கதிரியக்கம் அதிகம்: மக்களுக்கு அச்சம் தேவையில்லை

2 mins read
37e409cf-9721-44d4-9e06-ff8495fdb4ce
-

சிங்கப்பூரில் மார்ச் 6ஆம் தேதி சனிக்கிழமையன்று...

மூன்று மணி நேரத்தில் புறஊதா கதிரியக்கம் அளவுக்கு அதிகமான நிலையை எட்டியது.

இருந்தாலும் அதனால் கவலை அடைய வேண்டிய தேவை இல்லை என்று வல்லுநர்கள் பொதுமக்களுக்குத் திட்டவட்டமாக உறுதி கூறி இருக்கிறார்கள்.

அன்று முற்பகல் 11.45 முதல் பிற்பகல் 2.45 வரை அந்தக் கதிரியக்க அளவு 14 ஆக இருந்ததாக தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இணையத்தளம் தெரிவிக்கிறது.

புறஊதா கதிரியக்க அட்டவணை ஒன்று அனைத்துலக அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த அட்டவணை, புறஊதா கதிரியக்கத்தை அளவிடுவதற்கான தரத்தை நிர்ணயிக்கிறது. இதனிடையே, இது பற்றி விளக்கிய சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் கோ டியா யோங்,

"நிலநடுக்கோட்டிற்கு அருகே இருக்கும் நாடுகளில் புறஊதா கதிர் அதிகரிப்பது பொதுவானதே.

"சிங்கப்பூருக்கும் அது புதிதல்ல. அதனால் எந்த கவலையும் இல்லை என்று தெரிவித்தார்.

"குறிப்பாக இந்தக் காலகட்டத்தில் அந்தக் கதிரியக்க அளவு அதிகமாகவே இருக்கும்," என்று விளக்கினார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் டாக்டர் மத்தையஸ் ரோத், செப்டம்பர் முதல் மார்ச் வரைப்பட்ட காலத்தில் சூரியன் நில நடுக் கோட்டிற்கு நேரே இருந்து வரும் என்றார்.

இதனால் மற்ற காலங்களைவிட அந்தக் காலகட்டத்தில் சூரிய கதிரியக்கம் தீவிரமாக இருக்கும் என்று அவர் விளக்கினார். புறஊதா கதிரியக்க அளவு மார்ச் மாதத்தில் நண்பகல் நேரத்தில்தான் ஆக அதிக அளவை எட்டும் என்று அவர் கூறினார். ஏப்ரல், மே வரும்போது இந்தக் கதிரியக்கம் மறைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார். இருந்தாலும் தோல் நோய் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும் என்றாரவர்.