மேலும் 13 பேருக்கு கொரோனா

மேலும் 13 பேருக்கு கொரோனா

1 mins read
a6bc266e-5b58-4ec8-8c7e-e75c5435acfe
பாதிக்கப்பட்ட 13 பேரும் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இன்று நண்பகல் நிலவரப்படி சிங்கப்பூரில் மேலும் 13 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 60,046ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்ட 13 பேரும் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.

அவர்கள் சிங்கப்பூருக்கு வந்ததும் அவர்களுக்கு வீட்டிலேயே இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சமூக அளவில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

அதே போல, வெளிநாட்டு ஊழியர்கள் தங்கு விடுதிகளிலும் யாருக்கும் கிருமித்தொற்று ஏற்படவில்லை.

நேற்று 13 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.

அவர்களில் வெளிநாட்டு மாணவர் அட்டை வைத்திருக்கும் ஒருவர், வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் 10 பேர், குறுகிய கால குடியுரிமை அட்டை வைத்திருக்கும் இருவர் ஆகியோர் அடங்குவர்.

வெளிநாட்டு மாணவர் அட்டை வைத்திருப்பவர் இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த 19 வயது பெண் ஆவார்.

தமது பெற்றோருடன் சிங்கப்பூர் வந்த 13 வயது பங்ளாதேஷ் சிறுவனுக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கல்வி பயிலும் தமது பிள்ளையைக் காண இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த 49 வயது மாதுவுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்