மேலும் ஆறு பேருக்கு கொரோனா

மேலும் ஆறு பேருக்கு கொரோனா

1 mins read
f7089552-a38f-41ed-ba87-963df78335e4
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 60,052ஆக அதிகரித்துள்ளது.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று நண்பகல் நிலவரப்படி மேலும் ஆறு பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 60,052ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்ட ஆறு பேரும் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். அவர்கள் சிங்கப்பூர் வந்தடைந்ததும் அவர்களுக்கு வீட்டிலேயே இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சமூக அளவில் பாதிப்பு இல்லை. அதே போல வெளிநாட்டு ஊழியர்கள் தங்கு விடுதிகளிலும் யாருக்கும் கிருமித்தொற்று ஏற்படவில்லை.

நேற்று புதிதாக 13 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.

அவர்களில் இரண்டு சிங்கப்பூர் நிரந்தரவாசிகள், சார்ந்திருப்போர் அட்டை வைத்திருக்கும் ஒருவர், நீண்டகால குடியுரிமை அட்டை வைத்திருக்கும் ஒருவர், வொர்க் பாஸ் ஊழியர் ஒருவர், வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் ஏழு பேர், குறுகியகால குடியுரிமை அட்டை வைத்திருக்கும் ஒருவர் ஆகியோர் அடங்குவர்.

குறிப்புச் சொற்கள்