மியன்மாரின் வடக்குப் பகுதியில் உள்ள நகரம் ஒன்றில் வன்முறையைத் தடுக்க போலிசார் முன் மண்டியிட்டார் கன்னியாஸ்திரி ஆன் ரோஸ் நூ டோங்.
ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவோருக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டாம் என அதிகாரிகளிடம் அவர் மன்றாடினார்.
அவர் மண்டியிடுவதைப் பார்த்து இரண்டு போலிஸ் அதிகாரிகளும் அவர் முன் மண்டியிட்டு அவரிடம் பேசினர்.
"இங்கு எவ்விதப் பிரச்சினையும் நிகழக்கூடாது என்றும் போலிசார் இங்கிருந்து கிளம்பிச் செல்லாவிடில் நானும் இங்கிருந்து போகமாட்டேன் என்றும் நான் போலிசாரிடம் கூறினேன். ஆர்ப்பாட்டக்காரர்களைச் சுட வேண்டாம் என நான் அவர்களிடம் மன்றாடினேன்," என்றார் கன்னியாஸ்திரி டோங்.
கன்னியாஸ்திரி டோங்கும் போலிஸ் அதிகாரிகளில் ஒருவரும் தங்கள் தலைகளைத் தாழ்த்தி ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்திக்கொண்டனர்.

