கொவிட்-19 சூழலிலும் வர்த்தகக் கூட்டங்கள் தொடர்ந்து பாதுகாப்பான முறையில் நடைபெற உதவும் வகையில் சிங்கப்பூர் எக்ஸ்போவில் அமைக்கப்பட்ட 'கனெக்ட்@சாங்கி' அதன் முதற்கட்ட வர்த்தகப் பயணிகளை வரவேற்றுள்ளது.
முதற்கட்ட வர்த்தகப் பயணிகள் ஜெர்மனி, பிரான்ஸ், இந்தோனீசியா, ஜப்பான், ஐக்கிய அரபு சிற்றரசுகள் போன்ற நாடுகளிலிருந்து வந்தனர்.
வெளிநாட்டிலிருந்து வரும் இந்த வர்த்தகப் பயணிகள் கனெக்ட்@சாங்கி வசதியைப் பயன்படுத்தி சிங்கப்பூர் வர்த்தகர்களைச் சந்திக்கலாம்.
இருதரப்பினருக்கும் இடையே கண்ணாடித் திரை அமைக்கப்பட்டுள்ளது. கண்ணாடித் திரையின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்துக்கு காற்று நுழைய முடியாதபடி சந்திப்பு நிகழும் கூடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 18ஆம் தேதியிலிருந்து அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டதிலிருந்து எத்தனை பேர் அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற தகவலை வெளியிட கனெக்ட்@சாங்கி மறுத்துவிட்டது.
கனெக்ட்@சாங்கி 150 அறைகளைக் கொண்டுள்ளது.

