நாடுகளை இணைக்கும் பாலமாக வர்த்தகம்: ஹெங்

நாடுகளை இணைக்கும் பாலமாக வர்த்தகம்: ஹெங்

3 mins read
81d315c0-ccb0-43ab-864b-8adc7c9fc96e
-

அமெ­ரிக்­கா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடை­யி­லான உத்­தி­பூர்வ போட்டி அதி­க­ரித்து வரும் நிலை­யில் வர்த்தக நிறுவனங்கள் சமூ­கங்­

க­ளுக்கு இடை­யி­லான பால­மாக சேவை­யாற்­ற­லாம் என துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான ஹெங் சுவீ கியட் தெரி­வித்து உள்­ளார்.

அமெ­ரிக்க நிறு­வ­னங்­கள் இந்த வட்­டா­ரத்­தில் புதிய முத­லீட்டு வாய்ப்­பு­களை நாடும்­போது அதன் தள­மாக சிங்­கப்­பூர் சேவை­யாற்ற முடி­யும் என்­றும் அவர் கூறி­னார்.

"உலக அள­வி­லான பொருள் தரு­விப்பு ஆணை பெரும்­பா­லும் அர­சாங்­கங்­க­ளின் செயல்­பா­டு­

க­ளைப் பொறுத்தே தீர்­மா­னிக்­கப்­

ப­டு­வ­தால் நாடு­கள், சமூ­கங்­கள், வெவ்­வேறு கலா­சா­ரங்­கள் ஆகி­ய­வற்­றின் பால­மாக வர்த்தக உல­கம் அமை­ய­லாம்," என்­றார் திரு ஹெங்.

நாடுகள் உட்­புற மாற்­றம் கண்டு­ வ­ரும் வேளை­யில் உல­க­ம­யத்தை தொடர்ந்து கட்­டிக்­காப்­ப­தில் அமெ­ரிக்க வர்த்­தக நிறு­வ­னங்­கள் முக்­கிய பங்கு வகிப்­ப­தாக அவர் சொன்­னார்.

"தற்­போ­தைய வர்த்­தகமுறையை உரு­மாற்­றம் செய்­வ­தற்­கு­ரிய ஆக்­க­ க­ர­மான முயற்­சி­களை வலுப்­ப­டுத்­து­வ­தன் மூலம் அந்­நி­று­வ­னங்­கள் தங்­க­ளது பங்கை ஆற்ற முடி­யும்.

"எல்­லாத்­த­ரப்­பும் ஏற்­றுக்­கொள்­ளும் வகை­யி­லான சச்­ச­ரவு தீர்­வுக்­கு­ரிய வழி­மு­றை­க­ளு­டன், திட­மான விதி­க­ளின் அடிப்­ப­டை­யில் அமைந்த புதிய முறையை உரு­வாக்­கும் முயற்­சி­க­ளை­யும் ஆத­ரிப்­ப­தன் மூலம் அமெ­ரிக்க நிறு­வ­னங்­கள் சிறப்­பான பங்கை வகிக்­க­லாம்," என்­றார் துணைப் பிர­த­மர்.

சிங்­கப்­பூ­ரில் உள்ள அமெ­ரிக்க வர்த்­தக சபை ஏற்­பாடு செய்த ஆசிய பசி­பிக் வர்த்­தக மாநாட்­டில் அவர் பேசி­னார். அமெ­ரிக்­கா­வில் இருந்­தும் ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தில் இருந்­தும் வர்த்­த­கத் தலை­வர்­கள், அர­சாங்­கப் பிர­தி­நி­தி­கள், கொள்கை நிபு­ணர்­கள் போன்றோர் இதில் கலந்­து­கொண்­ட­னர்.

மரினா பே சேண்ட்­ஸில் தொடங்­கிய இந்த மூன்று நாள் மாநாடு நாளை நிறை­வு­றும். நேர­டி­யா­க­வும் காணொளி வழி­யா­க­வும் பங்­கேற்­கும் பல்­வேறு நிகழ்வு­ க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்டு உள்­ளது.

அர­சாங்­கக் கொள்­கை­களும் தொழில் நிறு­வ­னங்­களும் எவ்­வாறு மாற்­றம் பெற­லாம் என்­பது உள்­ளிட்ட பல்­வேறு கோணங்­களில் உரு­மாற்­றம் பெறு­வது தொடர்­பான தலைப்­பு­களில் பலர் உரை­யாற்­று­வர்.

திரு ஹெங் தமது உரை­யின் போது ஆசிய-பசி­பிக் வட்­டா­ரத்­தில் இயங்­கும் வர்த்­தக நிறு­வ­னங்­கள் எதிர்­கொள்­ளக்­கூ­டிய மூன்று சவால்­களைப் பட்­டி­ய­லிட்­டார்.

அத்­து­டன் அவை வளர்ச்­சி­பெற சாத்­தி­ய­முள்ள பகு­தி­களை அவர் அடை­யா­ளம் காட்­டி­னார்.

"முத­லா­வ­தாக, கொவிட்-19 மாற்­றி­விட்ட முன்­னேற்­றப் பாதை­யின் நிச்­ச­ய­மற்ற நில­வ­ரம். இந்த வட்­டா­ரத்­தில் உள்ள பெரும்­பா­லான நாடு­கள் கிரு­மிப் பரவல் முறி யடிப்பில் திறம்பட செயல்­பட்­டா­லும் நெருக்­க­டி­யி­லி­ருந்து மீள தடுப்­பூசி போடும் நட­வ­டிக்­கை­க­ளைத் தீவிரப்படுத்த வேண்­டிய அவ­சி­யத்­தில் அவை உள்­ளன.

"ஒவ்­வொரு பகு­தி­யி­லும் கொள்ளை­நோய் ஒழிக்­கப்­படும் வரை அதனை முழு­மை­யா­கக் கட்­டுப்­ப­டுத்த இய­லாது.

"அமெ­ரிக்க-சீன உத்­தி­பூர்வ போட்­டித்­தன்மை நீடிப்­பது இரண்­டா­வது சவால்.

"இந்த இரு­த­ரப்பு உற­வில் பைடன் தலை­மை­யி­லான புதிய அமெ­ரிக்க நிர்­வா­கம் எதிர்­பார்க்­கும் பலனை ஏற்­ப­டுத்­தும் என்ற நம்­பிக்கை உள்­ளது. அத்­து­டன் எஞ்­சிய ஆசிய வட்­டா­ரத்­தி­லும் அமெ­ரிக்­கா­வின் ஈடு­பாடு அவ­சி­ய­மா­னது.

"மூன்­றா­வது சவா­லாக உல­க­ள­வி­லான கடன் நில­வ­ரம் தோன்­று­ கிறது. இந்­தக் கடன் எந்த ஒரு கட்­டத்­தி­லும் திருப்­பித் தரப்­பட வேண்­டி­யது. இதில் நாம் கவ­னத்­து­டன் செயல்­ப­டா­வி­டில் பண­வீக்­கத்தை கடன்­சுமை பெரி­து­

ப­டுத்­தி­வி­டும்.

"அதன் தொடர்ச்­சி­யாக, புதிய வாய்ப்­பு­க­ளை­யும் நீடித்­தி­ருக்­கக்­கூ­டிய முத­லீ­டு­க­ளை­யும் பெற்­றுத்­

த­ரக்­கூ­டிய பொரு­ளி­யல் பாதிக்­கப்­படும்," என்று விவ­ரித்­தார் திரு ஹெங்.