துணைப் பிரதமர் ஹெங்: மின்னிலக்கத் திறன் இடைவெளியைக் குறைக்க முன்வரவும்

துணைப் பிரதமர் ஹெங்: மின்னிலக்கத் திறன் இடைவெளியைக் குறைக்க முன்வரவும்

1 mins read
a2bccfef-d43e-4333-a611-1e46cef413c9
உதவி செய்யப் போதுமான நேரமும் தகுந்த நிபுணத்துவமும் கொண்டிருப்பவர்கள் பொதுமக்களிடையே நிலவும் மின்னிலக்கத் திறன் இடைவெளியைக் குறைக்க உதவிக் கரம் நீட்ட முன்வர வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கேட்டுக்கொண்டார். படம்: திமத்தி டேவிட் -

உதவி செய்யப் போதுமான நேரமும் தகுந்த நிபுணத்துவமும் கொண்டிருப்பவர்கள் பொதுமக்களிடையே நிலவும் மின்னிலக்கத் திறன் இடைவெளியைக் குறைக்க உதவிக் கரம் நீட்ட முன்வர வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் இன்று கேட்டுக்கொண்டார்.

கொவிட்-19 நெருக்கடிநிலையிலிருந்து கூடுதல் வலிமையுடன் மீண்டு வர சிங்கப்பூருக்குத் தொழில்நுட்பம் கைகொடுத்ததை அவர் சுட்டினார்.

இரண்டாம் கட்ட 'ஸ்மார்ட் நேஷன் அண்ட் யு' திட்டத்தின் அறிமுக விழாவில் திரு ஹெங் கலந்துகொண்ட பேசினார். இந்த நிகழ்ச்சி நகர மறுசீரமைப்பு ஆணைய மையத்தில் நடைபெற்றது.

மின்னிலக்கத் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவக்கான விழிப்புணர்வை நாம் தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும் என்றும் மின்னிலக்கப் பயன்பாடு தொடர்பில் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றும் திரு ஹெங் வலியுறுத்தினார்.

வேலையிடங்களில் தொழில்நுட்பப் பயன்பாடு மிக விரைவாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஊழியர்களிடையே மின்னிலக்கத் திறன் இடைவெளி அதிகரித்துள்ளது.

மின்னிலக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பல நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், புதிய பதவிகளை நிரப்ப ஊழியர்களுக்கு மின்னிலக்கத் திறன் இருப்பதை சிங்கப்பூர் உறுதி செய்ய வேண்டும் என்றார் துணைப் பிரதமர் ஹெங்.

மின்னிலக்கத் திறன் இடைவெளியைக் குறைக்க ஒன்றிணைந்த சிங்கப்பூர் இயக்கத்தின் ஒரு பகுதியாகப் பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றார் அவர்.

அறிவார்ந்த தேச தூதராகவோ அல்லது மேற்கொள்ளப்படும் பல திட்டங்களில் ஒரு பகுதியாகவோ இருந்து பொதுமக்கள் உதவலாம்.