இலவச மின்னிலக்கத் திறன் இணையக் கருத்தரங்கிற்கு 11,000 பேர் பதிவு

இலவச மின்னிலக்கத் திறன் இணையக் கருத்தரங்கிற்கு 11,000 பேர் பதிவு

1 mins read
3f126d0f-e8b9-483f-be9d-2d0d3a5c2821
டௌன்டவுன் ஈஸ்ட்டில் அமைக்கப்பட்ட வேலை, திறன் சந்தையில் தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

'ஸ்மார்ட் நேஷன் அண்ட் யூ' திட்டத்தின்கீழ் வழங்கப்படும் இலவச மின்னிலக்கத் திறன் இணையக் கருத்தரங்கிற்கு இரண்டே வாரங்களில் ஏறத்தாழ 11,000 பேர் பதிவு செய்துள்ளனர்.

தொழில்நுட்பம் சார்ந்த திறன்களைக் கற்றுக்கொள்வதில் சிங்கப்பூரர்களுக்கு ஆர்வம் இருப்பதை இது உணர்த்துவதாக தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி இன்று தெரிவித்தார்.

டௌன்டவுன் ஈஸ்ட்டில் அமைக்கப்பட்ட வேலை, திறன் சந்தையில் அமைச்சர் ஜனில் இன்று உரையாற்றினார்.

"தொழில்நுட்பத் திறன்களைக் கற்றுக்கொள்ள அதிக நாட்டம் உள்ளது என்பதை சிங்கப்பூரர்கள் காட்டுகின்றனர். இந்தத் திறன்களைப் பயன்படுத்தும் வேலைகளில் சேர அவர்கள் விரும்புகின்றனர். தொழில்நுட்பத் திறன்கள் மிகவும் முக்கியமான திறன்கள்," என்று அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்பத்தால் வேலை இழக்கும் அபாயம் இல்லை என்றும் மாறாக தொழில்நுட்பத் திறன்களைக் கொண்டு கூடுதல் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றார் அவர்.

இணையம் வழி நடத்தப்படும் கருத்தரங்குகளுக்கான பதிவு கடந்த மாத இறுதியில் தொடங்கியது. இணையக் கருத்தரங்குகள் நாளை மறுநாள் தொடங்கி இம்மாதம் 26ஆம் தேதியன்று நிறைவடையும்.