சிங்கப்பூரில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை பத்தாண்டுகள் இல்லாத அளவில் கடந்தாண்டு குறைந்துள்ளது. அதே நேரத்தில் நூறு ஆண்டுகள் இல்லாத அளவில் மொத்த மரணங்களின் எண்ணிக்கை ஆக உயர்வாக உள்ளது.
கொவிட்-19 கிருமிப்பரவலால் ஏற்பட்டுள்ள பொருளியல் மந்தநிலை மற்றும் அதிகளவிலான நிச்சியமின்மை ஆகியவற்றால் சில தம்பதியர் பிள்ளைகள் பெறுவதைத் தள்ளிப்போடுவதாக நிபுணர்கள் கருதுகின்றனர். கடந்தாண்டு பிறந்த குழந்தைகளில் பெரும்பாலானவை கிருமிப்பரவலுக்கு முன்னதாக உண்டாகியிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
மூப்படையும் சமூகத்தால் முதியோரை ஆதரிக்கும் மக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு 38, 705 குழந்தைகள் பிறந்தன. இது 2019ஆம் ஆண்டில் இருந்த 39, 279ஐக் காட்டிலும் 1.5 விழுக்காடு குறைவு. 2010ன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 37,967.
இந்நிலையில் 22,000 பேர் சிங்கப்பூரில் கடந்தாண்டு இறந்தனர். 2019ஆம் ஆண்டில் பதிவான 21,446 மரணங்களைக் காட்டிலும் இது 2.6 விழுக்காடு அதிகம்.

