மியன்மார்: துப்பாக்கிச் சூட்டில் மேலும் பலர் பலி

மியன்மார்: துப்பாக்கிச் சூட்டில் மேலும் பலர் பலி

2 mins read
21b40335-5f64-4f82-879d-5cf69fc84e72
யங்கூனில் நேற்று பாதுகாப்புப் படையினர் சுட்டதில் கொல்லப்பட்ட மின் காட் சோ என்பவரின் உடலைத் தொட்டு உறவினர்கள் துக்கம் தாளாமல் கதறி அழுகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ் -

மியன்­மா­ரின் யங்­கூன் நக­ரில் மேலும் பல இடங்­களில் முழு ராணுவ சட்­டம் நீட்­டிக்­கப்­பட்டு உள்ளது. பாது­காப்­புப் படை­யி­ன­ரின் கடுமை­யான ஒடுக்­கு­மு­றைக்கு சென்ற வார முடி­வில் குறைந்­த­பட்­சம் 50 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

அதைத் தொடர்ந்து ராணுவ நிர்­வா­கம், ராணுவ சட்­டத்தை யங்கூன் நக­ரில் நீட்­டித்­துள்­ளது.

இதனிடையே, நேற்றும் துப்­பாக்­கிக் குண்­டு­க­ளுக்கு இரை­யாகி ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் ஆறு பேர் மாண்டு­விட்­ட­னர் என்று ஊட­கத் தக­வல்­கள் கூறின.

அந்த நக­ரில் இருக்­கும் தொழில் பேட்­டை­களில் ஞாயிற்­றுக்­கி­ழமை தீ மூட்­டப்­பட்­ட­தால் பல சீன நிறு­வ­னங்­கள் உப்­பட ஏரா­ள­மான தொழிற்­சா­லை­கள் அழிந்­த­தா­கக் கூறப்­படு­கிறது. சீன நிதி ஆத­ரவு பெற்ற 32 தொழிற்­சா­லை­கள் ஞாயிற்­றுக்­கி­ழமை தாக்­கப்­பட்­ட­தா­க­வும் S$50 மில்­லி­யன் சேதம் ஏற்­பட்­ட­தா­க­வும் குளோ­பல் டைம்ஸ் என்ற சஞ்­சிகை தெரி­வித்­தது.

இதை­ய­டுத்து பாது­காப்புத் தேவை என்று மியன்மார் அதி­காரி­களை சீனத் தூத­ர­கம் கேட்­டுக்­கொண்­ட­தா­க­வும் அதன் பிறகு முழு ராணு­வச் சட்­டம் யங்­கூ­னில் மேலும் பல இடங்­க­ளுக்கு நீட்­டிக்­கப்­பட்­ட­தா­க­வும் ராணுவ நிர்­வா­கம் கூறியது. மியன்­மா­ரில் ஜன­நா­யக ஆத­ரவு இயக்­கத் தலைவி சூச்சி அம்மையார் சிறை வைக்­கப்­பட்டு உள்ளதை எதிர்த்து ஜன­நா­யக ஆத­ரவு ஆர்ப்­பாட்­டங்­கள் நடந்து வரு­கின்­றன. நேற்­றும் பல நகர்­களில் ஆர்ப்­பாட்­டம் நடந்­தது.

மான்­டலே, ஆங்­லான், மியூங்­யான் ஆகிய நகர்­களில் போலி­சார் துப்­பாக்­கி­யால் சுட்­ட­தாக சம்­ப­வத்தை நேரில் பார்த்­த­வர்­களும் ஊட­கத் தக­வல்­களும் தெரி­வித்­தன. ஒரு சிறு­மிக்கு கையில் துப்­பாக்­கிக் குண்டு பாய்ந்­தது.

சிறு­வன் ஒரு­வன் முகத்­தில் சுடப்­பட்­டான் என்று மியூங்­யான் நக­ரில் பதுங்கிக்கொண்டுள்ள 18 வயது ஆர்ப்­பாட்­டக்­கா­ரர் ஒரு­வர் தொலை­பேசி மூலம் கூறி­ய­தாக ராய்ட்­டர்ஸ் நிறு­வ­னம் தெரி­வித்­தது.