நான்கு மையங்களில் மொடர்னா தடுப்பூசி

நான்கு மையங்களில் மொடர்னா தடுப்பூசி

2 mins read

புதி­தாக அமைக்­கப்­பட்­டுள்ள நான்கு கொவிட்-19 தடுப்­பூசி மையங்­களில் மொடர்னா நிறு­வனத்­தின் தடுப்­பூசி இன்று முதல் போடப்­படும்.

ஹொங் கா நார்த் சமூக மன்­றம், மார்­சி­லிங் சமூக மன்­றம், பொங்­கோல் 21 சமூக மன்­றம், ராடின் மாஸ் சமூக மன்­றம் ஆகி­ய­வையே அந்­நான்கு மையங்­கள்.

மற்ற அனைத்து தடுப்­பூசி மையங்­க­ளி­லும் பல­துறை மருந்­த­கங்­க­ளி­லும் குறிப்­பிட்ட பொதுச் சுகா­தார ஆயத்­த­நிலை மருந்­த­கங்­க­ளி­லும் ஃபைசர்-பயோ­என்­டெக் தடுப்­பூசி தொடர்ந்து போடப்­படும்.

மொடர்னா தடுப்­பூசி மேலும் வந்து சேர்ந்­த­பின் அதி­க­மான மையங்­களில் அந்­தத் தடுப்­பூசி போடப்­படும் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.

"ஒவ்­வொரு தடுப்­பூசி மையத்­தி­லும் ஒரு­வகை தடுப்­பூசி மட்­டுமே போடப்­படும். தடுப்­பூசிக்கு முன்­ப­திவு செய்­யும்­போது, இரு­முறை தடுப்­பூசி போட­வும் ஒரே மையத்­தைத் தேர்வு செய்ய வேண்­டி­யது அவ­சி­யம்," என்று அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

எத்­தனை பேருக்­குத் தடுப்­பூசி போட இய­லும் என்­ப­தில் ஒவ்­வொரு மைய­மும் வெவ்­வேறு கொள்­தி­ற­னைக் கொண்­டுள்­ள­தால், முதல்­முறை தடுப்­பூசி போடு­வ­தற்­கான காத்­தி­ருப்பு நேர­மும் மாறு­படும் என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

நன்­யாங் சமூக மன்­றம், செங்­காங் சமூக மன்­றம், அரீனா @ அவர் தெம்­ப­னிஸ் ஹப் ஆகிய மூவி­டங்­க­ளி­லும் இன்று முதல் புதிய தடுப்­பூசி மையங்­கள் செயல்­ப­டத் தொடங்­கும்.

ஏப்­ரல் மாத நடுப்­ப­கு­தி­யில், நாடு முழு­வ­தும் மொத்­தம் 40 தடுப்­பூசி மையங்­கள் இருக்­கும்.

புதிய ஏழு நிலை­யங்­க­ளு­டன் சேர்த்து, தகு­தி­யுள்­ள­வர்­கள் இப்­போது 31 தடுப்­பூசி நிலை­யங்­களி­லும் 20 பல­துறை மருந்­த­கங்­களிலும் 22 பொதுச் சுகா­தார ஆயத்­த­நிலை மருந்­த­கங்­க­ளி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள இய­லும்.

ஆயி­னும், பல­துறை மருந்­த­கங்­க­ளைக் காட்­டி­லும் அதி­க­மானோ­ரைக் கையாள முடி­யும் திற­னைக் கொண்­டுள்­ள­தால் தடுப்­பூசி மையங்­களில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முன்­ப­தி­வு­ செய்­யு­மாறு மக்­கள் ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

நேற்று முன்­தின நில­வ­ரப்­படி, 792,000க்கும் மேற்­பட்­டோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர். அவர்­களில் 243,000 பேர் இரு­முறை­யும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள்.

மூத்த குடி­மக்­க­ளுக்­கான தடுப்­பூசி நட­வ­டிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்­கிய நிலை­யில், இதுவரை 175,000க்கும் மேற்­பட்­டோர் தங்­க­ளது முதல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­ட­னர். ஏறக்­கு­றைய 230,000 பேர் முதல் தடுப்­பூ­சிக்கு முன்­ப­திவு செய்­துள்­ள­னர்.

தடுப்­பூசி நட­வ­டிக்­கையை முடுக்­கி­வி­டும் வகை­யில் அதி­க­மான தடுப்­பூசி மையங்­களை அமைக்­கும் பணி­யைச் சுகா­தார அமைச்சு விரை­வு­ப­டுத்­தி­யுள்­ளது.