சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் 'தவிர்க்க முடியாத காரணங்களுக்காக' தங்களுக்கு முன்னதாகவே தடுப்பூசி போடக் கோரி விண்ணப்பிக்கலாம் என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
கல்வி, வேலை, தங்களது அல்லது குடும்ப உறுப்பினரின் மருத்துவ சிகிச்சை போன்ற அவசர காரணங்களுக்காக தங்களுக்கு முன்கூட்டியே தடுப்பூசி போடக் கோரி வரும் விண்ணப்பங்களை அமைச்சு பரிசீலிக்கும்.
அப்படி விண்ணப்பிப்போர், தங்களுக்கான தடுப்பூசி நடவடிக்கை நிறைவுபெறும் வரை சிங்கப்பூரில் இருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். அதாவது, வெளிநாட்டிற்குக் கிளம்பும் நாளுக்குக் குறைந்தது எட்டு வாரங்களுக்குமுன் அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்போதைக்கு, மூன்று முதல் நான்கு வார கால இடைவெளிக்குள் இருமுறை தடுப்பூசி போடப்படும். இரண்டாம் முறை தடுப்பூசி போட்ட பிறகு, அது முழுச் செயல்திறனை எட்ட மேலும் இரு வாரங்கள் ஆகும். மேல்விவரங்களுக்கு https://www.vaccine.gov.sg/appeal எனும் இணையப் பக்கத்தை நாடலாம்.

