வேலைவாய்ப்பு விகிதம் குறைந்தது

வேலைவாய்ப்பு விகிதம் குறைந்தது

2 mins read

20 ஆண்டுகளில் இல்லாத சரிவு

சிங்­கப்­பூ­ரில் கடந்த இரு­பது ஆண்­டு­களில் இல்­லாத அள­விற்கு 2020ஆம் ஆண்­டில் வேலை­வாய்ப்பு விகி­தம் சரி­வைச் சந்­தித்­தது. வேலை இழந்­த­வர்­களில் பெரும்­பா­லா­னோர் வெளி­நாட்­டி­னர் என்று மனி­த­வள அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது.

அதே வேளை­யில், சிங்­கப்­பூரர்­க­ளை­யும் நிரந்­த­ர­வா­சி­க­ளை­யும் உள்­ள­டக்­கிய உள்­ளூர்­வா­சி­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு விகி­தம், கொவிட்-12 பர­வ­லுக்கு முன்­பி­ருந்த நிலை­யைக் காட்­டி­லும் சற்றே மேம்­பட்­டது.

சிங்­கப்­பூர் பொரு­ளி­ய­லும் வேலைச் சந்­தை­யும் கடந்த ஆண்­டின் இறு­திக் காலாண்­டில் இருந்து ஏறு­மு­கத்­தில் இருப்­பதை இந்­தப் புள்­ளி­வி­வ­ரங்­கள் காட்­டு­கின்­றன என்று மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ தெரி­வித்­துள்­ளார்.

அதே நேரத்­தில், அனைத்­துலக எல்­லை­கள் பெரும்­பா­லும் மூடப்­பட்­டி­ருப்­பது, வேலை ஆத­ரவுத் திட்­டம் போன்ற சம்­பள மானி­யத் திட்­டங்­கள் முடி­விற்கு வர­வி­ருப்­பது உள்­ளிட்ட அபாய கார­ணி­களும் நீடிப்­ப­தாக திரு­வாட்டி டியோ சொன்­னார்.

வேலை ஆத­ர­வுத் திட்­டம், வேலை வளர்ச்சி ஊக்­கு­விப்­புத் திட்­ட­மாக மாற்­றம் பெற­வி­ருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"ஆயினும், இத்­த­கைய திட்­டங்­கள் ஒன்­றில் இருந்து இன்­னொன்­றாக மாற்­றம் பெற்­றா­லும் வேலைச் சந்­தை­யில் என்ன நிகழ்­கிறது என்­பதை நாம் கண்­காணித்­தாக வேண்­டும்," என்­றார் அமைச்­சர்.

சென்ற ஆண்­டில் வெவ்­வேறு துறை­க­ளி­லும் உள்­ளூர்­வா­சி­களுக்­கான வேலை­வாய்ப்பு விகி­தம் ஏற்ற இறக்­க­மா­கக் காணப்­பட்­ட­தாக அமைச்சு தெரி­வித்­தது.

பொது நிர்­வா­கம், கல்வி, சுகா­தா­ரம், சமூ­க சேவை­கள், தக­வல் தொடர்பு, நிதி, காப்­பு­று­தி சேவை­கள், நிபு­ணத்­து­வ சேவை­கள் ஆகிய துறை­களில் உள்­ளூர்­வாசி­களுக்­கான வேலை­வாய்ப்பு கூடி­யது.

ஆயி­னும், பய­ணக் கட்­டுப்­பாடு­க­ளால் கடும் பாதிப்பிற்கு உள்ளான விமா­னத்­து­றை­யி­லும் சுற்­றுப்­ப­ய­ணத் துறை­யி­லும் அவ்­வி­கி­தம் பெரி­தும் கீழி­றங்­கி­யது.

வேலை அனு­ம­திச்­சீட்டு மற்­றும் பிற வேலை அனு­மதி அட்டை­தாரர்­கள் (-181,500), எஸ்-பாஸ் அட்­டை­தா­ரர்­கள் (-26,000), எம்ப்­ளாய்­மென்ட் அட்­டை­தா­ரர்­கள் (-16,700) ஆகி­யோர் எண்­ணிக்கை குறைந்­ததே அதற்கு முக்கிய கார­ணம்.

ஆட்­கு­றைப்பு அதிகரிப்பு

இத­னி­டையே, 2019ல் 2.3 விழுக்­காடாக இருந்த வேலை­யின்மை விகி­தம் 2020ல் 3 விழுக்­கா­டாக உயர்ந்­தது. உள்­ளூர்­வா­சி­க­ளி­டத்­தில் அவ்­வி­கி­தம் 3.1லிருந்து 4.1 விழுக்­கா­டா­க­வும் சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டத்­தில் 3.3லிருந்து 4.2 விழுக்­கா­டா­க­வும் அதி­க­ரித்­தது.

அதே­போல, சென்ற ஆண்­டில் ஆட்­கு­றைப்­பும் இரட்­டிப்­ப­டைந்­தது. 2019ல் 10,690 பேர் ஆட்­குறைப்பு செய்­யப்­பட்ட நிலை­யில், 2020ல் 26,110 பேர் அந்­ந­ட­வ­டிக்­கைக்கு ஆளா­கி­னர். அவர்­களில் வெளி­நாட்­டி­னரே அதி­கம் என அமைச்சு குறிப்­பிட்­டது.

50 வய­திற்கு மேலும் 30 வய­திற்­குக் கீழும் இருந்த ஊழி­யர்­களே ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட அதிக வாய்ப்பு நில­வி­ய­தா­கக் கூறப்­பட்­டது. அதே­போல, கடந்த ஆண்­டில் ஆண்­க­ளைக் காட்­டி­லும் பெண்­கள் ஆட்­கு­றைப்பு நட­வ­டிக்­கைக்கு ஆளாக அதிக வாய்ப்­பி­ருந்­த­தாகச் சொல்­லப்­பட்­டது.