பழுதுக்கான காரணங்களை அமைச்சர் ஓங் விளக்கினார்

பழுதுக்கான காரணங்களை அமைச்சர் ஓங் விளக்கினார்

3 mins read

ரயில்­தட விரி­வாக்­கத்­தில் அமைக்­கப்­பட்ட மின்­வடக்கம்­பி­யின் காப்பு நாடா­வில் ஏற்­பட்ட வெடிப்­பும் மின்­சா­த­னம் ஒன்­றின் துருப்­பி­டித்த பாக­முமே கடந்த ஆண்­டில் பெரிய அள­வில் நிகழ்ந்த ரயில் பய­ணத் தடைக்­கான கார­ணங்­கள் என கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

கடந்த ஆண்டு அக்­டோ­பர் 14ஆம் தேதி துவாஸ் வெஸ்ட் எக்ஸ்­டென்­ஷன் ரயில் தடத்­தில் ஏற்­பட்ட கோளாற்­றைக் கண்­ட­றிய அமைக்­கப்­பட்ட குழு தட­ய­வி­யல் விசா­ர­ணையை கடந்த சில மாதங்­க­ளாக நடத்தி வந்­தது. விசா­ரணை முடி­வின் விவ­ரங்­களை போக்கு­ வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங் விளக்­கி­யுள்­ளார்.

குறிப்­பிட்ட அந்த ரயில் தடத்­தில் நிகழ்ந்த கோளாறு கார­ண­மாக வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு, வட்­டப் பாதை ஆகிய மூன்று ரயில் தடங்­களில் பய­ணத் தடை ஏற்­பட்­டது.

உட்­லண்ட்­ஸுக்­கும் ஜூரோங் ஈஸ்ட்­டுக்­கும் இடைப்­பட்ட ரயில் நிலை­யங்­கள், குவீன்ஸ்­ட­வு­னுக்­கும் கல் சர்­கி­ளுக்­கும் இடைப்­பட்ட ரயில் நிலை­யங்­கள், சிராங்­கூ­னுக்­கும் ஹார்­பர்ஃபிரண்டுக்­கும் இடைப்­பட்ட ரயில் நிலை­யங்­கள் ஆகி­யன அன்­றைய தினம் பாதிக்­கப்­பட்­டன.

அதன் கார­ண­மாக 15 ரயில்­க­ளின் சேவை­கள் பாதிக்­கப்­பட்­ட­தோடு சுமார் 123,000 பய­ணி­கள் அவ­தி­யுற்­ற­னர்.

ஆங்­காங்கே நின்­று­விட்ட ரயில்­களில் இருந்து இறங்­கிய பய­ணி­கள் அடுத்­த­டுத்த நிலை­யங்­களை அடைய ரயில் தண்­ட­வா­ளங்­க­ளின் வழியே நடந்­து­செல்ல வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. அதே­நே­ரம் பேருந்து வழி­யாக தங்­க­ளது பய­ணத்­தைத் தொடர பல­ரும் அவ­ச­ர­மாக முயன்­ற­தன் கார­ண­மாக பேருந்து நிறுத்­தங்­களில் பெருங்­கூட்­டம் காணப்­பட்­டது.

அந்­தப் பயண இடை­யூறுக்­குக் கார­ண­மான கோளா­று­க­ளைச் சரி­செய்ய ஏரா­ள­மான செல­வும் செயல்­பா­டு­களும் தேவைப்­பட்­ட­தாக திரு ஓங் சொன்­னார்.

சம்­ப­வத்­திற்­குப் பின்­னர், துவாஸ் வெஸ்ட் எக்ஸ்­டென்­ஷன் தடத்­தில் 22 கிலோ வாட் மின்­வ­டக் கம்­பி­களை மாற்­றும் பணி­யில் ஆல்ஸ்­டம் என்­னும் நிறு­வ­னம் கடந்த டிசம்­பர் முதல் ஈடு­பட்டு வரு­வ­தாக அமைச்­சர் ஓங் கூறி­னார்.

இந்­தப் பணியை விரை­வாக முடிக்­கும் நோக்­கில் அந்த ரயில் தடம் வழி­யாக அமைந்­துள்ள குறிப்­பிட்ட சில நிலை­யங்­கள் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் மூடப்­பட்டு வரு­கின்­றன. இம்­மா­தம் 14ஆம் தேதி தொடங்கி மே 23ஆம் தேதி வரை இதே நிலை தொட­ரும். பாதிக்­கப்­படும் பய­ணி­க­ளுக்­காக இணைப்­புப் பேருந்துச் சேவை­கள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.

ஐடி­டிசி எனப்­படும் புதிய ஒருங்­கி­ணைந்த ரயில் சோதனை நிலை­யத்­திற்­கான நில அகழ்வு நிகழ்­ச்சியில் பங்­கேற்க வந்த அமைச்சர், செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

ரயில் தடங்­க­ளைப் பரா­ம­ரிப்­ப­தற்­கான செல­வு­கள் கடந்த பத்­தாண்­டில் இரட்­டிப்­பாகி உள்­ள­தாக அப்­போது அவர் குறிப்­பிட்­டார். அதே­நே­ரம் மித­மிஞ்­சிய பரா­ம­ரிப்­புக்­கான அவ­சி­யம் தேவைப்­ப­ட­வில்லை என்று கூறிய திரு ஓங் அதற்­கான விளக்­கத்­தைச் சொன்­னார்.

"அதிக பணத்­தை­யும் நிறைய அம்­சங்­க­ளை­யும் ஈடு­ப­டுத்தி அதற்கு ஈடா­ன பலன்­க­ளைப் பெற­மு­டி­யா­மல் போவ­து­தான் அத்­த­கைய மித­மிஞ்­சிய பரா­மரிப்பு. அது வெறும் கணக்­காக மட்­டுமே தோன்­றும். அவ்­வாறு செய்­வது புத்­திசாலித்­த­ன­மா­னது அல்ல.

"சின்­னஞ்­சி­றிய தவ­று­கள் பெரிய இடை­யூ­று­களை உரு­வாக்­கும் என்­பதை நாம் புரிந்­து­கொண்டு செய்­ல­பட வேண்­டும்.

"எனவே எங்கு தேவையோ அங்கு செல­வி­டு­வோம். அதா­வது, பாது­காப்­பை­யும் நம்­ப­கத்­தன்­மை­யை­யும் உறு­திப்

­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­க­ளின் மீது கவ­னம் செலுத்­து­வோம்.

"நமது ஊழி­யர்­க­ளுக்­குப் பயிற்சி அளிப்­போம். பிரச்­சி­னை­க­ளைக் கண்­ட­றிந்து சரி­செய்­வ­தற்­கான திறன்­களை வளர்த்­துக்­கொள்ள அவர்­க­ளுக்கு உத­வு­வோம். இவற்­றின் மூலம் பரா­ம­ரிப்­புப் பணி­களை துடிப்­பான முைறயில் மேம்­

ப­டுத்­த­லாம்," என்று திரு ஓங் விவ­ரித்­தார்.

மூன்று ரயில் தடங்களில் 123,000 பயணிகளை பாதித்த பயணத் தடை