மோசமடையும் நிலவரம்: இந்திய மாநிலங்களில் இறுகும் கட்டுப்பாடுகள்

மோசமடையும் நிலவரம்: இந்திய மாநிலங்களில் இறுகும் கட்டுப்பாடுகள்

2 mins read

இந்­தி­யா­வின் கொரோனா கிரு­மித்­தொற்று நில­வ­ரம் மீண்டும் உச்­சக்­கட்­டத்­தை நெருங் காமல் தடுத்து நிறுத்­த தேவை­யான நட­வ­டிக்­கைளை விரைந்து மேற்­கொள்ள வேண்­டும் என மாநில முத­ல­மைச்­சர்­க­ளுக்கு பிர­ த­மர் மோடி வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

"சில மாநி­லங்­களில் வேக­ம­டைந்­து வரும் பர­வலை நாம் கட்­டுப்­ப­டுத்­தத் தவ­றி­னால் பின்­னர் நாட­ளா­விய பர­லாக அது உரு­வெ­டுத்­து­வி­டும். எனவே இரண்­டா­வது உச்­சக்­கட்ட நிலையை கிரு­மிப் பர­வல் அடைந்­து­வி­டா­மல் உட­ன­டி­யாக தடுத்து நிறுத்த வேண்­டும். அதற்­குத் தேவைப்­படும் பெரிய அள­வி­லான, இறுக்கமான கட்டுப்பாடுகளை நாம் விதிக்க வேண்­டும்.

"கொரோனா கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த நாம் காட்டி வரும் தன்­னம்­பிக்கை, நாம் மீண்­டு­விட்­டோம் என்ற மித­மிஞ்­சிய நம்­பிக்­கை­யாக மாறி­வி­டக்­கூ­டாது. எனவே, விரைந்து நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். அதே­நே­ரம் மக்­கள் பீதி­ய­டைந்­து­வி­டா­மல் பார்த்­துக்­கொள்ள வேண்­டும். கிரு­மிப் பர­வலை முன்­கூட்­டியே கண்­ட­றி­வ­தற்கு உரிய ஏற்­பா­டு­களை செய்­வ­தோடு தடுப்­பூ­சி­களை அதி­க­ள­வில் போடு­வ­தற்கு ஏற்­பாடு செய்ய வேண்­டும்.

"சிறு நக­ரங்­க­ளி­லும் அதி­கக் கவ­னம் செலுத்தி கிருமி பர­வாத வண்­ணம் தடுக்­கப்­பட வேண்­டும். தொற்று நில­வ­ரம் மோச­

ம­டைந்த முதற்­கட்­டத்­தில் தப்­பித்த இரண்­டாம் நிலை, மூன்­றாம் நிலை நக­ரங்­கள்­கூட தற்­போது பாதிக்­கப்­பட்டு வரு­வ­தைக் கவ­னத்­தில் கொள்ள வேண்­டும்," என்று விளக்­கி­னார் இந்­தி­யப் பிர­த­மர்.

இந்­தி­யா­வில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்­தில் கொரோனா கிருமி பர­வத் தொடங்­கி­யது. ஒவ்­வொரு மாநி­ல­மும் பாதிக்­கப்­பட்டு மோச­மான நிலை ஏற்­பட்­டது. அத­னைத் தொடர்ந்து நாடு முழு­வ­தை­யும் முடக்கி வைக்க அப்­போது பிர­த­மர் மோடி உத்­த­ர­விட்­டார். 2020 செப்­டம்­ப­ரில் தொற்று நில­வ­ரம் உச்­ச­ம­டைந்து பின்­னர் படிப்­ப­டி­யா­கக் குறை­யத் தொடங்­கி­யது. அத­னைத் தொடர்ந்து கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு வந்­தன. ஆயி­னும், இவ்­வாண்டு தொடங்­கி­யது முதல் சில மாநி­லங்­களில் கிரு­மிப் பர­வல் மீண்­டும் வேக­மெ­டுத்­தது. மகாராஷ் டிரா, பஞ்­சாப், கேரளா, கர்­நா­டகா, குஜ­ராத், தமிழ்­நாடு, மத்­தி­யப் பிர­தே­சம் ஆகிய மாநி­லங்­க­ளி­ல் தொற்­றுப் பர­வல் அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது. இந்­தியா முழு­வ­தும் தின­மும் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை கடந்த மாதம் 8,000க்கும் கீழ் குைறந்­தி­ருந்த நிலை­யில் தற்­போது அந்த எண்­ணிக்கை 25,000க்கும் மேல் அதி­க­ரித்து வரு­கிறது.

சுகா­தார அமைச்­சின் அறிக்­கை­யின்­படி, நேற்­றுக் காலை வரை­யி­லான 24 மணி நேரத்­தில் 28,903 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­டது, கடந்த ஆண்டு டிசம்­பர் 13ஆம் தேதிக்­குப் பிறகு இதுவே ஆக அதி­க­மான எண்­ணிக்கை. நாடு முழு­வ­தும் ஏற்­கெ­னவே 11.44 மில்­லி­யன் மக்­களை கிருமி தொற்­றி­விட்ட நிலை­யில் மரண எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்து வரு­கிறது. புதி­தாக 188 பேர் மாண்­ட­தாக நேற்று அறி­விக்­கப்­பட்­டது. இரு மாதங்­களில் இதுவே அதி­க­மான மரண எண்­ணிக்கை. கிட்­ட­த்தட்ட கடந்த ஆண்­டின் நில­வ­ரத்­தைப்போலவே கிரு­மிப் பர­வல் நில­வ­ரம் உரு­வெ­டுத்து வரு­கிறது. எனவே, அவ­சர நட­வ­டிக்­கைகளை அடை­யா­ளம் காணும் நோக்­கில் அனைத்து மாநில முத­ல­மைச்­சர்­க­ளு­டன் பிர­த­மர் மோடி நேற்று காணொளி மூலம் ஆலோ­சனை நடத்­தி­னார்.