துவாஸ் வட்டாரத்திலுள்ள புதிய ஒருங்கிணைந்த ரயில் சோதனை மையம் 2024ஆம் ஆண்டின் இறுதியில் முழுமையாக செயல்பட உள்ளது. பல்வேறு ரயில்களையும் ரயில் கட்டமைப்பையும் சோதனை செய்யும் உலகிலேயே முதல் நிலையங்களில் ஒன்றாக இது திகழவிருக்கிறது.
புதன்கிழமை தொடங்கிய இந்த நிலையத்தின் கட்டுமானப் பணிகள், எம்ஆர்டி கட்டமைப்பின் வலுவை அதிகரிப்பதற்கான அடுத்த பணி என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யீ காங், அடிக்கல் நாட்டு விழாவில் தெரிவித்தார். தென்கிழக்காசியாவில் உள்ள இந்த நிலையம், முன்னாள் ராபிள்ஸ் கன்ட்ரி கிளப்பில் உள்ள 50 ஹெக்டர் நிலப்பரப்பில் உள்ளது. தற்போது நிறுத்தப்பட்டுள்ள கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் சேவைத் திட்டத்திற்காக அந்த நிலம் வாங்கப்பட்டது.
2019ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கான குத்தகை, ஜிஎஸ் என்ஜினியரின் என்ற தென்கொரிய நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது.

