"முஸ்லிம், கிறிஸ்துவர், பௌத்த சமயத்தினர் என பல்வேறு சமயக் குழுக்கள் இருந்தாலும் சமூக நன்மைக்காக அனைவரும் கைகோக்கும்பொழுது ஓர் அணுக்கமான பிணைப்பு உண்டாகிறது.
"நல்லிணக்கம், ஒத்துழைப்பு, அன்பு ஆகியவற்றின் அடிப்படையில் எழுவதால் இப்பிணைப்பு பயங்கரவாத வன்செயல்களுக்கு எதிரான தாக்கத்தை உண்டாக் கும்," என கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் கூறியுள்ளார். 'அறப்பணி பிரியாணி 2021' என்னும் நிதித் திரட்டு நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற அவர் பின்னர் செய்தி
யாளர்களிடம் பேசினார்.
காலித் பள்ளிவாசல், கல்வி அறநிதி, மெண்டாக்கி, சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம், பள்ளிவாசல்கள் ஆகியன இணைந்து இந்த நிதித் திரட்டு முயற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
இதில் காலித் பள்ளிவாசல் தொண்டூழியர்களுடன் 'ஹார்ட் ஆஃப் காட்' தேவாலயத் தொண்டூழியர்களும் ஒன்றிணைந்து பிரியாணிப் பொட்டலங்களை தயார் செய்ய உதவினர். இந்நிகழ்வு சமய நல்லிணக்கத்தின் முன்னுதாரண மாகப் பார்க்கப்படுகிறது.
"இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்
படுத்தும் நன்மைகளும் தாக்கங்களும் நமது பார்வைக்கு அப்பாற்பட்டவை. கல்விக்கு உதவும் நிதித் திரட்டின் வழி வெவ்வேறு சமயத்தவர், இனத்தவர்க்கு இடையிலான உறவு வலுவடைகிறது. இத்தகைய நிகழ்வுகள் சிங்கப்பூரில் சமயம் சார்ந்த பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் குறைப்பதில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
"இளைஞர்கள் வளர வளர தங்களது அடையாளங்களைக் கண்டறிய விரும்புகின்றனர். சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இதுபோன்ற நிகழ்வுகள் அவர் களிடத்தில் நேர்மறை சிந்தனையை வளர்க்கும். மேலும் சமயத் தலைவர்கள் இன்று நல்லிணக்கத்தை தங்களது செயல்களின் வழி வலியுறுத்த இது உதவும்." என்றார் திரு யோங்.
இந்த நன்கொடைத் திரட்டில் பங்கேற்று சுமார் 11,000 பிரியாணிப் பொட்டலங்களை வாங்க மக்கள் முன்வந்துள்ளனர். இதன் மூலம் கிட்டத் தட்ட $100,000 நிதி திரட்டப்பட்டுள்ளது.
நன்கொடை முழுவதும் கல்வி அறநிதி உதவித் திட்டத்திற்கு வழங்கப்படும். வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் அடிப்படைப் பள்ளித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இது உதவும்.
புத்தகப் பற்றுச்சீட்டுகள், பொதுப் போக்குவரத்துக்கான மானியங்கள் ஆகியவை இதில் அடங்கும். மெண்டாக்கியின் துணைப்பாடங்
களைக் கற்கச் செல்லும் வசதி
குறைந்த 800 மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் $200 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளும் மானியங்களும் வழங்கப்படும் என கல்வி அறநிதியின் தலைவர் திரு அப்துல் ரசாக் மரிக்கார் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் காலித் பள்ளி
வாசல் பிரியாணி மிகவும் பிரபலம். காலித் பள்ளிவாசல் தொண்டூழியர்களும் தேவாலயத் தொண்டூழியர்களும் சேர்ந்து நேற்று சுமார் 6,000 பிரியாணிப் பொட்டலங்களைத் தயார் செய்து விநியோகித்தனர்.
தொண்டூழியர்களில் ஒருவர் 26 ஆண்டுகளாக காலித் பள்ளிவாசலில் உறுப்பினராகப் பணியாற்றி வரும் திரு நிஸ்தார் இஸ்மாயில், 54. தமது இரண்டு மகன்
களுடன் சேர்ந்து அவர் இந்தத் தொண்டூழியப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
அறப்பணி நிதித் திரட்டு நிகழ்வில் அமைச்சர் எட்வின் டோங் தகவல்

