புதிய உச்சத்தில் கிருமித்தொற்று; மக்களின் அலட்சியமே காரணம் என்கிறது இந்தியா

புதிய உச்சத்தில் கிருமித்தொற்று; மக்களின் அலட்சியமே காரணம் என்கிறது இந்தியா

2 mins read

இந்­தி­யா­வில் மீண்­டும் வேக­ம் எடுத்­தி­ருக்­கும் கிரு­மிப் பர­வல் சம்­ப­வங்­கள் ஒவ்­வொரு நாளும் புதிய உச்­சத்­தைத் தொட்டு வரு­கின்­றன. புதி­தாக 40,953 பேருக்­குக் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக நேற்­றுக் காலை அறி­விக்­கப்­பட்­டது. கடந்த 4 மாதங்­ களில் ஆக அதி­க­மாகப் பதிவான ஒரு­நாள் தொற்று இது. 2020 நவம்­பர் 29ல் 41,810 என பதி­வான எண்­ணிக்­கையை புதிய சம்­ப­வங்­கள் நெருங்கி வரு­கின்­றன.

குறிப்­பாக, கடந்த பத்து நாட்­களாக ஒவ்­வொரு நாளும் 20,000க்கும் மேல் தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வாகி வரு­கின்­றன. இதன் கார­ண­மாக புதிய நோயாளி­ க­ளுக்­கும் நோய்த் தொற்­றில் இருந்து குண­ம­டை­வோ­ருக்­கும் இடை­யி­லான விகி­தம் அதிகரித்து வரு­கிறது. புதி­தாக 40,953 பேர் பாதிக்­கப்­பட்ட அதே நாளில் குண­ம­டைந்­தோ­ரின் எண்­ணிக்கை 23,653 என பதி­வா­னது.

புதிய எண்­ணிக்­கை­யில் பெரும் பகுதி, அதா­வது 25,681 சம்­ப­வங்­கள் மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் பதி­வாகி உள்­ளன.

இம்­மா­நி­லத் தலை­ந­க­ரான மும்பை ஆக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்டு வரு­கிறது. ஒரே நாளில் 3,062 தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­னது அங்கு அதிர்ச்­சியை ஏற்­

ப­டுத்தி உள்­ளது. அந்­ந­க­ரில் கடந்த ஆண்டு அக்­டோ­பர் 7ஆம் தேதி பதி­வா­ன­தைக் காட்­டி­லும் இப்­போது கூடு­தல் தொற்று உரு­வாகி உள்­ளது. அன்­றைய தினம் ஆக அதி­க­மாக 2,848 பேர் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

பர­வல் வேகத்­தைக் கட்­டுப்

­ப­டுத்த ஏற்­கெ­னவே ஏரா­ள­மான கட்­ட­டங்­க­ளுக்கு 'சீல்' வைக்­கப்­பட்ட நிலை­யில் வெள்­ளிக்­கி­ழமை மேலும் 305 கட்­ட­டங்­கள் மூடப்­பட்­டன. இந்­நி­லை­யில், மத்­திய உள்­து­றைச் செய­லா­ளர் அஜய் பல்லா, எல்லா மாநி­லங்­க­ளுக்கும் சுற்­ற­றிக்கை ஒன்றை அனுப்பி உள்­ளார். மக்­க­ளின் அலட்­சி­யமே நிலை­மையை மீண்­டும் மோச­மாக்கி­விட்­ட­தா­கக் குறிப்­பிட்ட அவர், முகக்­க­வ­சம், சமூக இடை­வெளி போன்ற அம்­சங்­களில் கடுமை காட்­டு­மாறு கூறியுள்ளார்.