முதியோர், சக்கர நாற்காலி பயனாளர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் எம்ஆர்டி ரயில் பெட்டிகளுக்கான சோதனை, தற்போதைய கிருமிப்பரவலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று சன்டே டைம்ஸ் தெரிவித்தது.
இந்தச் சோதனையை நிலப் போக்குவரத்து ஆணையம் 2019ஆம் ஆண்டில் முதன்முதலாகப் பரிந்துரைத்தது. நிலைமை மேலும் ஆராயப்படும்வரை புதிய திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படவேண்டும் என்று நிலப்போக்குவரத்து ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்தார். இந்தச் சோதனை, வடமேற்கு ரயில் பாதையில் நடத்தப்பட வேண்டி இருந்தது.
ரயில் மின்தூக்கிகளுக்கு அருகிலுள்ள பெட்டிகளில் தேவைப்படும் பயணிகளுக்கு இருக்கைகளைக் கொடுக்குபடியான அறிவிப்புப் பதாகைகள் ளை வைக்கப்பட வேண்டி இருந்தது. பிறரை அதிகம் ஒருங்கிணைக்கும் போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்கவும் சிங்கப்பூரின் பயண கலாசாரத்தை மாற்றவும் இந்நாடு எடுத்துவரும் முயற்சியில் இது அங்கம் வகித்திருக்கும்.

