நிமிடத்தில் 6,250 ஊசிகள் தயாரிக்கும் இந்தியா

நிமிடத்தில் 6,250 ஊசிகள் தயாரிக்கும் இந்தியா

2 mins read

கொவிட்-19 கிரு­மியைத் துடைத்­தொழிக்க உல­கெங்­கும் தடுப்­பூசி இயக்­கம் சூடு­பி­டித்து வரு­கிறது.

மருந்­துக்கு மட்­டு­மின்றி ஊசிக்கும் பற்­றாக்­குறை நில­வு­வ­தால் ஜப்­பான், அமெ­ரிக்கா, ஐரோப்­பிய நாடு­கள் உட்­பட உல­கின் பல நாடு­களும் இந்­தி­யாவை இடைவிடாது நெருக்கி வருகின்­றன.

ஒருமுறை பயன்­ப­டுத்­தப்­படும் ஊசி­க­ளைத் தயா­ரிப்­ப­தில் உல­கி­கில் முன்­ன­ணி­யில் இருக்­கும் இந்­தியா, உல­கத் தேவை­களை நிறை­வேற்­றும் வகை­யில் முயற்­சி­களை முடுக்­கி­விட்டு உள்­ளது.

இந்­தி­யா­வின் 'எச்­எம்டி' என்ற 'ஹிந்­துஸ்­தான் சிரஞ்­சஸ் & மெடிக்­கல் டிவை­சஸ்' என்ற நிறு­வ­னம், இப்­போது ஒரு நிமி­டத்­திற்கு 6,250க்கும் அதிக 0.5 எம்­எல் ஊசி­கள் என்ற வேகத்­தில் ஊசி­களை தரத்­து­டன் உரு­வாக்கி வரு­கிறது.

இந்த நிறு­வ­னம், புது­டெல்­லிக்கு அருகே ஃபரி­தா­பாத்­தில் உள்ள தன் தொழிற்­சா­லை­யில் வழக்­க­மாக ஆண்டு ஒன்­றுக்கு 2.5 பில்­லி­ய­னுக்­கும் அதிக எண்­ணிக்­கை­யில் பல்­வேறு ஊசி­களை உரு­வாக்­கும்.

ஆனால் இப்­போது கொவிட்-19 கார­ண­மாக பல்­வேறு நாடு­களில் இருந்­தும் குறிப்­பிட்ட வகை ஊசி­களுக்­குத் தேவை கூடியுள்­ளது.

வரும் ஜூன் மாத வாக்­கில் ஒரு பில்­லி­யன் ஊசி­யைத் தயா­ரிக்­க­வும் இந்த ஆண்டு செப்­டம்­பர் வாக்­கில் 1.2 பில்­லி­யன் ஊசி­க­ளைத் தயாரிக்­க­வும் நிறு­வ­னம் செய­லில் இறங்கி இருக்­கிறது.

கொவிட்-19 ஊசிக்­கான தேவை யுடன் தடுப்பு மருந்­துக்­கும் தேவை கூடி வரு­வ­தால் பிரே­சில், சவூதி அரே­பியா, மொராக்கோ போன்ற நாடு­கள் தங்­க­ளுக்கு உட­ன­டி­யாக மருந்து தேவை என இந்­தி­யாவை நெருக்­கு­கின்­றன.

ஊசி­க­ளைப் போலவே ஊசி மருந்து தயா­ரிப்­பி­லும் இந்­தியா முத­லி­டத்­தில் இருக்­கிறது.

இருந்­தா­லும், உள்­நாட்­டுத் தேவை அதி­க­மாக இருப்­ப­தால் அஸ்ட்­ரா­செ­னிகா மருந்தை மேற்­கொண்­டும் அனுப்­பு­வது தாம­தம் அடை­யும் என்று அந்த நாடு­க­ளி­டம் இந்­தி­யா­வின் சீரம் மருந்­து நிறு­வ­னம் தெரி­வித்துவிட்டது.

தனக்கு மேலும் 120 மில்­லி­யன் மருந்து தேவை என்று இந்­திய அரசு சீரம் உட்­பட இரு இந்­திய நிறு­வ­னங்­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது.

ஆகை­யால் இந்த உத்­த­ரவை நிறை­வேற்ற வேண்­டிய அவ­சர அவ­சி­யம் இந்­திய நிறு­வ­னங்­களுக்கு ஏற்­பட்­டுள்­ளது.

அதே­வே­ளை­யில், உல­கத் தேவை­க­ளைச் சமா­ளிப்­ப­தி­லும் இந்­தியா தனது ஒரு­மித்த கவ­னத்­தைத் திருப்­பி­விட்டு உள்­ளது.

இந்­தியா இது­வ­ரை­ மொத்­தம் 75 நாடு­க­ளுக்கு ஏறக்­கு­றைய எட்டு மில்­லி­யன் ஊசி­ம­ருந்தை கொ­டை­யாக அளித்துள்ளது.