இந்தோனீசிய அமைச்சர்: பாதுகாப்புமிக்க பயண வட்டாரத்திற்கு ரியாவ் தீவு வழிவகுக்க முடியும்

இந்தோனீசிய அமைச்சர்: பாதுகாப்புமிக்க பயண வட்டாரத்திற்கு ரியாவ் தீவு வழிவகுக்க முடியும்

2 mins read

சிங்­கப்­பூ­ருக்கு மிக அரு­கி­ல் இருக்­கும் இந்­தோ­னீ­சி­யா­வின் பாத்­தாம், பிந்­தான் உள்­ளிட்ட ரியாவ் தீவு­கள் அடங்­கிய வட்­டா­ரம், பக்­கத்து நாடு­களில் இருந்து வரும் சுற்­றுப் பய­ணி­க­ளுக்­குத் தன் கதவை திறந்து­விட ஏறக்­கு­றைய ஆயத்­த­மா­கி­விட்­டன என்று இந்­தோ­னீ­சி­யா­வின் சுற்­றுலா, புத்­தாக்கப் பொரு­ளி­யல் அமைச்­சர் சாண்­டி­யாகோ உனோ கூறி இருக்­கி­றார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று குறைந்து வரு­வ­தும் நிலைப்­பட்டு இருப்­ப­துமே இதற்­குக் கார­ணம் என்று அவர் குறிப்­பிட்­டார்.

பாத்­தாம் தீவில் உள்ள நாங்சா என்ற சுற்­று­லாத்தலம் பிந்­தா­னில் உள்ள லாகோய் என்ற சுற்­றுலா இடம் ஆகி­ய­வற்றை ஏப்­ரல் 21 முதல் பய­ணி­க­ளுக்­குத் திறந்­து­விட்டு, இந்­தப் பய­ணத் திட்­டத்­தைத் தொடங்­க­லாம் என்றார் அவர்.

பாத்­தாம் அதி­கா­ரி­க­ளு­டன் அமைச்­சர் சனிக்­கி­ழமை பேச்சு நடத்­தி­னார். அதை­ய­டுத்து கருத்து கூறிய இந்­தோ­னீ­சிய அமைச்­சர், பாத்­தாம், பிந்­தான் ஏறக்­கு­றைய தயா­ரா­கி­விட்­டன என்­றார்.

ரியாவ் தீவு­கள் திறக்­கப்­ப­டு­வதால் சிங்­கப்­பூ­ரு­டன் பாது­காப்­பான பயண ஏற்­பாட்டை இந்­தோ­னீசியா செய்­து­கொள்­வது சாத்­தி­ய­மா­க இருக்­குமென்­றார் திரு உனோ.

இந்தோ­னீ­சிய தீப­கற்­பத்­தின் அனைத்­து­லக எல்­லைப் பகு­தி­கள் கொவிட்-19 நில­வ­ரத்­திற்­கேற்ப படிப்­ப­டி­யாக திறக்­கப்­ப­டக்­கூ­டும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

அதி­பர் விடோ­டோ­வின் உத்­த­ர­வுக்கு இணங்க இந்த நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­று­வ­தா­க­வும் அவர் கூறி­னார். இந்­தோ­னீ­சி­யா­வின் முக்­கி­ய­ சுற்­றுலா இட­மா­கத் திகழும் பாலி தீவு, ஜூன் அல்­லது ஜூலை­யில் மட்­டுமே மீண்­டும் திறக்­கப்­படும் என்று தெரிகிறது.

ரியாவ் தீவு­களில் கொவிட்-19 தொற்று நிலைப்­பட்­டு­விட்­டது. அங்கு உள்ள பிர­பல சுற்­றுலா இடங்­களில் புதிய தொற்று இல்லை என்­பதை திரு உனோ சுட்­டி­னார். கிருமித்தொற்றைத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்­தி­ருக்க முடி­யும் என்­பதே நம்­பிக்கை என்­றாரவர்.

ரியாவ் வழியாக இந்­தோ­னீசியா வுக்கு வரும் வெளி­நாட்டு சுற்­றுப் பய­ணி­கள் தங்­க­ளுக்கு கிரு­மித்­தொற்று இல்லை என்­பதை சான்­றி­தழ் மூலம் நிரூ­பிக்க வேண்­டும். தரை­யி­றங்­கும்­போது அவர்­க­ளுக்கு சுவா­சப் பரி­சோ­தனை நடத்­தப்­படும்.

சுற்­றுப் பய­ணி­க­ளின் நட­மாட்­டத்தைக் கண்­கா­ணிக்க தக­வல் தொழில்­நுட்­ப­மும் பயன்­ப­டுத்­தப்­படும் என்­றும் அவர் கூறி­னார். சிங்­கப்­பூருடன் பாது­காப்­பான பயண வட்­டா­ரத்தைத் திறந்­து­வி­ட ஆயத்­த­மாக பாத்­தா­ம், பிந்­தா­னி­ல் தடுப்­பூசி இயக்­கத்தை இந்­தோ­னீ­சியா அர­சாங்­கம் தீவி­ரப்­ப­டுத்தி உள்ளது.