வேலை தேடுவோருக்கு பொருத்தமான வேலைகளைத் தேடித் தர 'அடெக்கோ பர்சனல்' எனும் நிறுவனத்தை அரசாங்கம் நியமித்துள்ளது.
வேலை தேடும் சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் பொருத்தமான வேலைகளைப் பெற்றுத் தர 'எஸ்ஜி ஒற்றுமை வேலைகள், திறன்களுக்கான தொகுப்புத்திட்டத்தின் கீழ் இத்தகைய சேவைகளுக்கு நியமிக்கப்படும் முதல் நிறுவனம் இது.
பொருத்தமான வேலைகளையும் ஊழியர்களையும் இணைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளு டன் இணைந்தும், ஒட்டுமொத்த வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் இத்தகைய பங்காளித்துவம் உதவுவதாக மனிதவள அமைச்சும் சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.
சுவிட்சர்லாந்தைத் தலைமைய கமாகக் கொண்ட அடெக்கோ பர்சனல்' 1985ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் செயல்பட்டு வருவதாக அந்த அறிக்கை சுட்டியது.
நியாயமான முறையில் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனங்கள், உள்ளூர்வாசிகளுக்குப் பொருத்தமான வேலைகளைப் பெற்றுத்தர உதவும் வேலைவாய்ப்பு பங்காளிகளாக நியமிக்கப்படும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
"வேலைவாய்ப்பு நிறுவனங்களின் நியமனமும் ஊழியர் சந்தை யில் முக்கிய பங்கு வகிக்கிறது. விரிவான தொடர்பு கட்டமைப்பை கொண்டுள்ள இவை, வேலை தேடுபவர்களின் திறன்களுக்கு ஏற்ப பொருத்தமான வேலைகளைப் பெற்றுத் தருவதில் உள்ள நிபுணத்துவம் பெற்றவை,"
என அறிக்கை கூறியது.
வேலை தேடுபவர்கள், நீண்டகாலமாக வேலை தேடுபவர்கள், வேலைச் சந்தையில் இணைய விரும்பும் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு வேலை தேடித் தருவதற்கும் வேலைப் பயிற்சிகளில் தகுந்தவர்களை இணைப்பதற்கும் வேலைவாய்ப்பு பங்காளிகளாக நியமிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள், கட்டணங்களைப் பெறும்.
வேலை தேடுபவர்களின் திறன் களுக்கு ஏற்ப, வேலைகள், பணியிடப் பயிற்சி, பணியிட இணைப்பு வாய்ப்புகள் போன்றவற்றை இவை பெற்றுத் தரும்.திறந்த ஏலக் குத்தகை மூலம் 'அடெக்கோ பர்சனல்' தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் இதன் ஒப்பந்த காலம் ஓராண்டுக்கு நீடிக்கும் எனவும் கூறப்பட்டது.
பொருத்தமான வேலைகளைப் பெற்றுத் தருவதுடன், வேலை தேடுவோருக்கு வேலைகள் குறித்த குறிப்புகளை வழங்க நேரடி, இணைய பயிலரங்குகளையும் நடத்தும்.
அரசாங்கத்தின் தற்போதைய வேலைப் பொருத்த முயற்சிகளை விரிவாக்க, வேலைவாய்ப்பு முகவர்கள் முக்கிய பங்காற்றுவர் என்று சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பின் தலைமை நிர்வாகி திரு டான் சூன் ஷியான் கூறினார்.
வேலை தேடுவோர் இந்த சேவையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வர் என தாம் எதிர் பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
வேலை தேடித் தரும் சேவையை இலவசமாக வழங்க வேலைவாய்ப்பு முகவை ஒன்றை சிங்கப்பூர் ஊழியரணி நியமித்திருப்பது இது முதல்முறை அல்ல.

