தடுப்பூசி சான்றிதழுக்கு இருதரப்பு அங்கீகாரம்

இணைந்து செயல்பட சிங்கப்பூர்-மலேசியா இணக்கம்

எதிர்­கா­லத்­தில் இரு நாடு­க­ளுக்கு இடையே பய­ணம் செய்ய ஏது­வாக கொவிட்-19 தடுப்­பூ­சிச் சான்­றி­தழ்­க­ளுக்கு இரு­த­ரப்­பும் அங்­கீ­காரம் அளிப்­பது தொடர்­பில் சிங்­கப்­பூ­ரும் மலே­சி­யா­வும் இணைந்து செயல்­பட உடன்­பட்­டுள்­ளன.

வரும் மாதங்­களில் கருணை அடிப்­ப­டை­யி­லான எல்லை தாண்­டிய பய­ணங்­களை அனு­ம­திக்க இருநாடு­களும் ஒப்­புக்­கொண்­டு உள்­ளன.

இருநாள் பய­ண­மாக மலே­சியா சென்­றுள்ள வெளி­யு­றவு அமைச்­சர் டாக்­டர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன், புத்­ரா­ஜெ­யா­வில் நேற்று அந்­நாட்டு வெளி­யு­றவு அமைச்­சர் ஷிஷா­மு­தீன் ஹுசே­னைச் சந்­தித்­துப் பேசி­னார்.

இப்­போ­துள்ள இரு சிறப்­புப் பயண ஏற்­பா­டு­க­ளு­டன் மற்ற வகைப் பய­ணி­களும் பய­ணம் செய்ய ஏது­வாக எல்லை தாண்­டிய பய­ணத்­தைப் படிப்­ப­டி­யாக அனு­மதிக்­க­வும் இரு­நாட்டு அமைச்­சர்­களும் இணக்­கம் தெரி­வித்­த­னர்.

இரு நாடு­க­ளி­லும் கொவிட்-19 நிலைமை கண்­கா­ணிக்­கப்­பட்டு, இரு நாட்டு மக்­க­ளின் பொதுச் சுகா­தா­ர­மும் பாது­காப்­பும் உறு­தி­செய்­யப்­படும்.

தத்­தம் நாடு­களில் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரும் தேசிய அள­விலான தடுப்­பூ­சித் திட்­டங்­கள் குறித்து அமைச்­சர்­கள் இரு­வ­ரும் ஆக்­க­க­ர­மான பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தா­க­வும் கூடிய விரை­வில் எல்லை தாண்­டிய பய­ணத்­திற்கு அவை எவ்­வாறு வகை செய்­யும் என்பது குறித்து ஆலோ­சித்­த­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் உள்ள மலே­சி­யர்­கள், மலே­சி­யா­வில் இருக்­கும் சிங்­கப்­பூ­ரர்­கள் உட்­பட இரு நாடு­க­ளி­லும் உள்ள நீண்­ட­கா­லக் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­குத் தடுப்­பூசி அளிக்­கும் வகை­யில் தேசிய அள­வி­லான தங்­க­ளது தடுப்­பூ­சித் திட்­டங்­க­ளைத் தொடர்ந்து முன்­னெ­டுத்­துச் செல்ல உறு­தி­பூண்­டு இருப்பதாக ஒரு கூட்­ட­றிக்கை மூலம் இரு நாடு­களும் தெரி­வித்­துள்­ளன. தடுப்­பூ­சிச் சான்­றி­த­ழுக்­கான இரு­த­ரப்பு அங்­கீ­கா­ரம் தொடர்­பான செயல்­பாட்டு விவ­ரங்­களை இருநாடுகளும் பேசி, முடிவு செய்­யும்.

"இருநாட்­டுப் பிர­த­மர்­களும் சந்­திக்­கும்­போது இதன் தொடர்­பில் சில அறி­விப்­பு­களை வெளி­யி­டு­வோம் என நம்­பு­கி­றேன்," என்று டாக்­டர் விவி­யன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

இரு­நாட்­டுத் தலை­வர்­க­ளின் 10வது சந்­திப்பு குறித்­தும் அமைச்­சர்­கள் ஆலோ­சித்­த­னர். அச்­சந்­திப்பு இவ்­வாண்டு சிங்­கப்­பூ­ரில் நடை­பெ­றும். நேரடி இரு­த­ரப்பு ஈடு­பா­டு­களை மீண்­டும் தொடங்­கு­வது தொடர்­பில் பணி­யாற்­ற­வும் அமைச்­சர்­கள் இரு­வ­ரும் இணக்­கம் தெரி­வித்­த­னர்

இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பை மறு­ஆய்வு செய்த அமைச்­சர்­கள், கொரோனா தொற்று ஏற்­ப­டுத்­திய தாக்­கங்­களில் இருந்து மீள்­வதை முடுக்­கி­வி­டும் வகை­யில் ஒத்­துழைப்பை வலுப்­ப­டுத்­த­வும் ஆர்­வ­மாக இருப்­ப­தா­கக் கூறி­னர்.

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­விற்­கும் இடை­யி­லான மிகச் சிறப்­பான, நீண்­ட­கால உற­வு­களை மறு­ உறுதிப்­ப­டுத்­திய அமைச்­சர்­கள், இரு­த­ரப்­பிற்­கும் நலம்­ ப­யக்­கும் ஒத்­து­ழைப்பை வலுப்­ப­டுத்த வேண்­டிய அவ­சி­யத்­தை­யும் சுட்­டி­னர்.

ஓராண்­டிற்­கும் அதிக காலத்­திற்­குப் பின் மலே­சியா சென்­றது மகிழ்ச்சி அளிப்­ப­தா­க­வும் நேர­டிச் சந்­திப்­பிற்கு மாற்­றாக ஏது­மில்லை என்­றும் டாக்­டர் விவி­யன் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் தெரி­வித்­து உள்­ளார்.

முன்­ன­தாக, கூட்­டா­கச் செய்தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­த­போது மியன்­மா­ரில் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடிநிலை குறித்­தும் அந்­நாட்டு மக்­கள் மீதும் எடுக்­கப்­படும் நட­வடிக்­கை­கள் குறித்­தும் இரு­நாட்டு அமைச்­சர்­களும் கவலை தெரி­வித்­த­னர்.

தமது பய­ணத்­தின்­போது மலே­சி­யப் பிர­த­மர் முகை­தீன் யாசின், மூத்த அமைச்­ச­ரும் அனைத்­து­லக வர்த்­தக, தொழில் அமைச்­ச­ரு­மான அஸ்­மின் அலி, மூத்த அமைச்­ச­ரும் தற்­காப்பு அமைச்­ச­ரு­மான சப்ரி யாக்­கோப், அறி­வி­யல், தொழில்­நுட்ப, புத்­தாக்க அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் ஆகி­யோ­ரை­யும் டாக்­டர் விவி­யன் சந்­திக்­க­வி­ருக்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!