'முஸ்லிம் தாதியர் தலையங்கி அணிய அனுமதிப்பது குறித்துப் பரிசீலனை'

'முஸ்லிம் தாதியர் தலையங்கி அணிய அனுமதிப்பது குறித்துப் பரிசீலனை'

2 mins read
8c3cd2dd-58a3-444d-b95b-bfc7cc266985
கதிஜா பள்ளிவாசலில் நேற்று நடைபெற்ற சமய மறுவாழ்வுக் குழுவின் காலாண்டு ஈடுபாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் கா.சண்முகம். அவருடன் மேடையில் (இடமிருந்து) சமய மறுவாழ்வுக் குழுவின் இணைத் தலைவர் உஸ்தாஸ் முகம்மது ஹஸ்பி ஹசான், உஸ்தாஸ் அலி பின், உள்துறை துணை அமைச்சர் டாக்டர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பணி­யின்போது முஸ்­லிம் தாதி­யர் தலை­யங்கி (துடோங்) அணிய அனு­ம­திப்­பதை அர­சாங்­கம் பரி­சீலித்து வரு­வதாக முஸ்­லிம் தலை­வர்­க­ளி­டம் ஆறு மாதங்­களுக்­கு­முன் தெரி­விக்­கப்­பட்­டது என்று சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம் தெரி­வித்­துள்­ளார்.

தாதி­யர் தலை­யங்கி அணிய விரும்­பி­னால், அவர்­கள் அவ்­வாறு செய்ய அனு­ம­திப்­ப­தற்­கான கார­ணங்­களை அர­சாங்­கத்­தால் புரிந்­து­கொள்ள முடி­கின்­றது என்­றும் சமூ­கத்­து­ட­னும் மற்ற குழுக்­க­ளு­ட­னும் ஆலோ­சித்­த­பின் அர­சாங்­கம் தனது முடிவை அறி­விக்­கும் என்­றும் அமைச்­சர் சண்­மு­கம் கூறி­னார்.

கேலாங் சாலை­யில் அமைந்­துள்ள கதிஜா பள்­ளி­வா­ச­லில் நேற்று மூத்த முஸ்­லிம் தலை­வர்­களு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லின்­போது திரு சண்­மு­கம் இவ்­வாறு பேசி­னார்.

சிங்­கப்­பூர் இஸ்­லா­மி­யக் கல்­வி­மான்­கள், சம­யப் போத­கர்­கள் சங்­கத்­தின் (பெர்­காஸ்) தலை­வர் உஸ்­தாஸ் ஹஸ்பி ஹசான், மூத்­தோ­ருக்­கான 'பெர்­காஸ்' மன்ற உறுப்­பி­னர்­கள் உஸ்­தாஸ் அலி முகம்­மது, உஸ்­தாஸ் பசுனி மௌலான் ஆகி­யோர் இந்தச் சந்­திப்பு நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­ற­னர். அவர்­களும் ஆறு மாதங்­க­ளுக்கு அமைச்­சர் கூறிய கருத்­து­களை உறு­திப்­ப­டுத்­தி­னர்.

சமூ­கத்­து­டன் கலந்­து­ரை­யா­டல்­கள் இடம்­பெற்று வரு­வ­தா­க­வும் அவை நிறை­வ­டைய இன்­னும் சில மாதங்­கள் ஆக­லாம் என்­றும் முஸ்­லிம் தலை­வர்­க­ளி­டம் திரு சண்­மு­கம் சொன்­னார். பிர­த­மர் லீ சியன் லூங்­கும் சமூ­கத் தலை­வர்­க­ளைச் சந்­திப்­பார் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி கதிஜா பள்­ளி­வா­ச­லில் முஸ்­லிம் தலை­வர்­க­ளைச் சந்­தித்­த­போது, தாம் கூறி­ய­தைப் பற்றி அமைச்­சர் சண்­மு­கம் பகிர்ந்­து­கொண்­டார்.

முஸ்­லிம் விவ­கா­ரங்­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி, பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் டாக்­டர் முகம்­மது மாலிக்கி ஒஸ்­மான் ஆகி­யோர் இம்­மா­தம் 8ஆம் தேதி நாடா­ளு­மன்­றத்­தில் கூறிய கருத்து­க­ளு­டன் அர­சாங்­கம் ஒத்த நிலைப்­பாட்­டைக் கொண்­டுள்­ளது என்­றும் அவர் சொன்­னார்.

இது உணர்­வு­பூர்­வ­மான விவ­கா­ரம் என்­ப­தி­லும் தனிப்பட்ட முறையில் விவா­திக்­கப்­பட வேண்­டும் என்­ப­தி­லும் இணக்­கம் நில­வு­வதாக டாக்­டர் மாலிக்கி ஒஸ்­மான் அப்­போது தெரி­வித்­தி­ருந்­தார்.

இத­னி­டையே, இவ்­வி­வ­கா­ரம் தொடர்­பில் மலாய்/முஸ்­லிம் சமூ­கத்­தி­ன­ரின் கருத்­து­களை மலாய்/முஸ்­லிம் எம்.பி.க்கள் அமைச்­ச­ர­வை­யி­டம் தெரி­வித்து இருப்­ப­தா­க­வும் அவர்­கள் பல்­வேறு குழுக்­களு­டன் பேசி­ய­தா­க­வும் அமைச்­சர் மச­கோஸ் நேற்று ஓர் அறிக்கை மூலம் தெரி­வித்­துள்­ளார்.

"அந்­தக் கலந்­து­ரை­யா­டல்­கள் பெரும்­பா­லும் தனிப்பட்ட முறையில் நடந்­தன. பல­த­ரப்­பட்ட கருத்­து­கள் குறித்து வெளிப்­ப­டை­யாக விவா­தித்­தோம், பல்­வேறு சம­யத்­தி­னர் வாழும் நம் நாட்­டில் பொது­வான சமய வெளி­க­ளைப் பாது­காப்­ப­தற்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­பட வேண்­டும் என்­பதைப் பலரும் புரிந்து­கொண்­ட­னர்," என்றார் அமைச்­சர் மச­கோஸ்.