பிரதமர் லீ சியன் லூங்கிற்கு எதிராக அவதூறு பரப்பியதற்காக அவருக்கு $133,000 செலுத்த வேண்டும் என வலைப்பதிவாளர் லியோங் சீ ஹியானுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலேசியாவில் நிகழ்ந்த 1எம்டிபி மோசடியுடன் பிரதமர் லீயை அந்நாட்டு செய்தி இணையப்பக்கமான 'தி கரவரேஜ்' தொடர்புபடுத்தி பொய்ச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அச்செய்தியைத் தமது ஃபேஸ்புக் இணையப்பக்கத்தில் பகிர்ந்துகொண்டதற்காக திரு லியோங்கிற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. 'தி கவரேஜ்' செய்தி இணையப்பக்கம் வெளியிட்ட செய்தியின் நம்பகத்தன்மையை உறுதி செய்யாமல் அதை திரு லியோங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டதாக நீதிபதி ஏடிட் அப்துல்லா தெரிவித்தார்.
அவதூறு வழக்கு: பிரதமர் லீ சியன் லூங்கிற்கு வலைப்பதிவாளர் லியோங் $133,000 செலுத்த வேண்டும்
1 mins read
பிரதமர் லீ சியன் லூங்கிற்கு (இடது) எதிராக வெளியிடப்பட்ட பொய்ச் செய்தியைத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட வலைப்பதிவாளர் லியோங் சீ ஹியான் (வலது). படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

