7 வயது சிறுமியின் மரணத்தால் கொந்தளிப்பு; கூடுதல் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு

7 வயது சிறுமியின் மரணத்தால் கொந்தளிப்பு; கூடுதல் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு

1 mins read
2fca4414-6716-47a9-a536-b4ca7907cbd0
பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட சிறுமியின் இறுதிச்சடங்கில் அழுது புலம்பிய உறவினர்கள். படம்: இபிஏ -

தடுத்து வைக்கப்பட்ட 600க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை மியன்மார் ராணுவம் இன்று விடுவித்ததாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் அந்நாட்டின் மூத்த சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"இன்சென் சிறையிலிருந்து 360 ஆடவர்களையும் 268 பெண்களையும் இன்று நாங்கள் விடுவித்தோம்," என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி கூறினார்.

இந்நிலையில், மண்டலே நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது வீட்டில் இருந்த 7 வயது சிறுமி காயமடைந்து உயிரிழந்தார்.

சிறுமியின் தந்தையைக் குறிவைத்து அதிகாரிகள் சுட்டதாகவும் ஆனால் அவரது மடியில் உட்கார்ந்துகொண்டிருந்த அச்சிறுமியின் உடலில் தோட்டா பாய்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது மியன்மார் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ ஆட்சிக்கு எதிராக மேலும் பல ஆர்ப்பாட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. அதில் அமைதிப் போராட்டம் ஒன்றும் அடங்கும். சிறுமியின் மரணத்தை கண்டித்து கடைகள் மூடவும் மக்கள் வீட்டிலேயே இருக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.