46 ஊழியர்கள் வேலையிட விபத்துகளில் கைகள், விரல்களை இழந்தனர்

வேலை­யி­டங்­களில் நேர்ந்த விபத்­து­க­ளால் சென்ற ஆண்டு மட்­டும் 46 ஊழி­யர்­கள் தங்­க­ளின் கைகள், விரல்­களை இழந்­துள்­ள­னர்.

பெரும்­பா­லும் இயந்­தி­ரங்­களை இயக்­கு­வ­தில் போதிய பாது­காப்­பைக் கடைப்­பி­டிக்­கா­த­தால் ஊழி­யர்­க­ளுக்கு இந்­நிலை நேர்ந்­த­தாகக் கூறப்­படுகிறது.

ஊழி­யர்­க­ளின் வாழ்க்கை, வாழ்­வா­தா­ரம் ஆகி­ய­வற்­றில் நீடித்த தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் இத்­தகைய விபத்­து­கள், தடுக்­கப்­ப­டக் கூடி­ய­வையே என்று வலி­யு­றுத்­தி­னார் மனி­த­வள மூத்த முணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது.

வேலை­யி­டப் பாது­காப்பு மற்­றும் சுகா­தார மன்­றத்­தின் 'சேஃப் ஹேண்ட்ஸ்' இயக்­கத்தை நேற்று அவர் தொடங்கி வைத்­த­போது இத­னைத் தெரி­வித்­தார்.

இது­போன்ற சம்­ப­வங்­கள் மீண்­டும் நடக்­கா­மல் இருப்­பதை உறுதி­செய்ய, முயற்­சி­களை முடுக்­கி­வி­ட­வேண்­டும் என்­றார் அவர்.

விபத்து நேர­வி­ருந்த தரு­ணங்­களை­ப் பற்றி புகார் செய்­யும் கலா­சாரத்தை நிறு­வ­னங்­கள் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்று அவர் ஊக்­கு­வித்­தார்.

இயந்­தி­ரங்­க­ளைப் பாது­காப்­பாக இயக்­கு­வது, கை மற்­றும் விரல் காயங்­க­ளைத் தவிர்ப்­ப­தற்­கான வழி­கள் ஆகி­ய­வற்­றின் தொடர்­பில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வதே 'சேஃப் ஹேண்ட்ஸ்' இயக்­கம்.

இயந்­தி­ரப் பயன்­பாட்­டின்­போது சென்ற ஆண்டு 1,756 பேருக்­குக் காயம் ஏற்­பட்­ட­தாக அமைச்­சர் ஸாக்கி தெரி­வித்­தார். இது 2019ஆம் ஆண்­டின் 2,262ஐக் காட்­டி­லும் குறைவே.

இருப்­பி­னும், கிருமி முறி­ய­டிப்பு கால­கட்­டம் நடை­மு­றை­யில் இருந்­த­தா­லும் வர்த்­தக நட­வ­டிக்­கை­கள் நிறுத்தி வைக்­கப்­பட்­ட­தா­லும் இந்த சரிவு ஏற்­பட்­டி­ருக்­க­லாம் என்று அவர் சுட்­டி­னார்.

வெவ்­வேறு வேலை­யிட விபத்து­களில் சென்ற மாதம் மட்­டும் 11 ஊழி­யர்­கள் உயி­ரி­ழந்­த­னர். அவ்­வாறு நேர்ந்த சம்­ப­வங்­களில் சில, 'ஃபோர்க்­லி­ஃப்ட்' போன்ற இயந்­தி­ரப் பயன்­பாட்­டின்­போது நேர்ந்­தவை.

"ஒரு விபத்தோ ஒரு­வ­ரின் உயிரோ, இழப்பு அதி­கம்­தான்," என்­றார் திரு ஸாக்கி.

மேலும் அதி­க­மான முத­லா­ளி­கள், ஊழி­யர்­க­ளின் பாது­காப்பை உறு­தி­செய்ய செய­லில் இறங்க வேண்­டும் என்­றார் அவர்.

இப்­பொ­றுப்பை நிறு­வ­னங்­கள் ஊழி­யர்­க­ளி­டத்­தில் விட்­டு­வி­டக்­கூ­டாது என்­றும் அவர் அறி­வு­றுத்­தி­னார்.

வேலை­யிட சுகா­தா­ரப் பிரச்­சினை­கள் தொடர்­பி­லும் திரு ஸாக்கி பேசி­னார். அத்­து­டன் மன­ந­லத்­தின் முக்­கி­யத்­து­வத்தை அமைச்­சர் வலி­யு­றுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!