மும்பை தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் பலி

மும்பை தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் பலி

1 mins read
34547614-591d-4b3c-9c58-da2fe76cd926
-

மும்பை நகரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றை உள்ளடக்கும் கடைத்தொகுதி தீ பிடித்த சம்பவத்தில் குறைந்தது ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் சிலர் காணவில்லை என்றும் அவர்கள் கடைத்தொகுதியிலுள்ள மருத்துவமனையில் சிக்கியிருக்கலாம் என்று உள்ளூர் அதிகாரிகள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

கொவிட்-19 கிருமித்தொற்று உள்ள 70க்கும் அதிகமான நோயாளிகள் வேறு பல நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தீக்கான காரணம் தற்போது ஆராயப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.