30,000 குடியேறி ஊழியருக்கு தடுப்பூசி

30,000 குடியேறி ஊழியருக்கு தடுப்பூசி

2 mins read
482539cb-a45b-43e7-b177-f7f6b24fbaf3
புதிதாக வரும் குடியேறி ஊழியர்களுக்காக பொங்கோலில் கட்டப் பட்டுள்ள 'எம்­ட­பிள்­யூ­ஓசி' வசிப்­பி­டத்தைப் பார்வையிடும் மனிதவள இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரின் கொவிட்-19 தடுப்­பூ­சித் திட்­டம் இரண்­டாம் கட்­டத்தை நோக்கி நக­ரும் வேளை­யில் வரும் வாரங்­களில் சுமார் 30,000 குடி­யேறி ஊழி­யர்­கள் முதல் தடுப்­பூ­சி­யைப் பெறு­வார்­கள். 30 தங்­கு­மி­டங்­க­ளைச் சேர்ந்த ஊழி­யர்­கள் இவர்­கள். தகு­தி­யுள்ள சுமார் 9,000 ஊழி­யர்­களில் கிட்­டத்­தட்ட 97 விழுக்­காட்­டி­ன­ருக்கு முதல் தடுப்­பூசி போடப்­பட்­டு­விட்­ட­தாக மனி­த­வள இரண்­டாம் அமைச்­சர் டாக்­டர் டான் சீ லெங் தெரி­வித்­துள்­ளார்.

சிங்­கப்­பூ­ரில் ஊழி­யர் விடு­தி

­க­ளாக உரு­வாக்­கப்­பட்ட ஆகப்­பெ­ரிய தங்­கு­மி­டங்­களில் ஐந்து தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு அவற்­றில் வசிக்­கும் பத்­தா­யி­ரம் பேருக்­குத் தடுப்­பூசி போடும் திட்­டம் இரு வாரங்­க­ளுக்கு முன்­னர் அறி­விக்­கப்­பட்­டது.

அத­னைத் தொடர்ந்து தங்­கு­

வி­டு­தி­களில் அமைக்­கப்­பட்டு உள்ள மருத்­துவ நிலை­யங்­களில் அவர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டது. அவர்­கள் தங்­க­ளுக்­கான இரண்­டா­வது தடுப்­பூ­சியை அடுத்த மாதம் போட்­டுக்­கொள்ள உள்­ள­னர்.

பொங்­கோ­லில் உள்ள எம்­ட­பிள்­யூ­ஓசி எனப்­படும் குடி­யேறி ஊழி­யர் வசிப்­பிட மையத்தை நேற்று பார்­வை­யிட்ட டாக்­டர் டான் அங்கு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசினார்.

புதி­தாக சிங்­கப்­பூ­ருக்கு வரும் ஊழி­யர்­க­ளுக்­கான கொவிட்-19 பரி­சோ­தனை, மேம்­ப­டுத்­தப்­பட்ட மருத்­து­வப் பரி­சோ­த­னை­கள், வீட்­டில் தங்­கும் கட்­டாய உத்­த­ரவு ஆகி­ய­வற்றை ஒரே இடத்­தில் செய்­து­கொள்ள இத்­த­கைய எம்­ட­பிள்­யூ­ஓசி வசிப்­பி­டங்­கள் நான்கு சிங்­கப்­பூ­ரில் ஏற்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளன. வெளி­நா­டு­களில் இருந்து சிங்­கப்­பூ­ருக்கு வரு­வோ­ரி­ட­மி­ருந்து இங்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று பர­வும் அபா­யத்­தைக் குறைக்க இந்த ஏற்­பாடு கைகொ­டுக்­கும். அதே நேரம் புதிய ஊழி­யர்­கள் பாது­காப்­பாக சிங்­கப்­பூர் வந்து தங்­க­வும் இது வகை­செய்­யும் என்று மனி­த­வள அமைச்சு ஏற்­கெ­னவே கூறி இருந்­தது. ஓராண்டு முன்­னோ­டித் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக இவை கட்­டப்­பட்டு வரு­கின்­றன. ஐந்­தா­வது எம்­ட­பிள்­யூ­ஓசி வசிப்­பி­டம் விரை­வில் சுவா சூ காங்­கில் கட்­டப்­பட உள்­ளது. இந்த ஐந்து வசிப்­பி­டங்­க­ளி­லும் 7,000 புதிய ஊழி­யர்­கள் வரை தங்கி கட்­டுப்­பா­டு­களை நிறை­வேற்­ற­லாம்.

குடி­யேறி ஊழி­யர்­க­ளுக்­கான முதல் சுற்று தடுப்­பூசி செயல்­பாடு தனித்­து­வ­மிக்கதாக இருந்­ததென டாக்­டர் டான் கூறி­னார். அடுத்­த­கட்­ட­ நடவடிக்கையாக பெரிய தங்­கு­வி­டு­தி­களில் நிறை­வேற்­றப்­படும் என்­றும் பின்­னர் கட்­டம் கட்­ட­மாக இதர பகு­தி­க­ளின் ஊழி­யர்­க­ளுக்­கும் தடுப்­பூசி போடப்­படும் என்­றும் அவர் கூறி­னார். இங்கு புதி­தாக வரும் ஊழி­யர்­கள் அவர்­க­ளது நாட்­டில் ஏற்­கெ­னவே போட்­டுக்­கொண்ட தடுப்­பூ­சிக்கு சிங்­கப்­பூர் அங்­கீ­க­ரிக்­குமா என்று டாக்­டர் டானி­டம் செய்­தி­யா­ளர்­கள் வின­வி­னர். இது பற்றி அவ்­வ­ளவு சீக்­கி­ரத்­தில் முடி­வெ­டுக்க இய­லாது என்­றும் அவர்­கள் எந்த மாதி­ரி­யான தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டார்­கள் என்­ப­தைப் பொறுத்து முடிவெடுக்கப்படலாம் என்­றும் அவர் பதி­ல­ளித்­தார்.

"பல தடுப்பூசிகளை சுகாதார அமைச்சின் நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். அதன் முடிவுகள் வெளியான பின்னர் இது பற்றி அதிகம் தெரிவிக்க முடியும்," என்று அவர் கூறினார். ஊழியர்களுக்கான கட்டுப்பாடுகளை விலக்குவது பற்றி அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் முடிவெடுக்கப் படும் என்றும் அவர் தெரிவித்தார்.