மூத்தோர் தயக்கம் காரணமாக மலேசிய தடுப்பூசி பதிவு மந்தம்

மூத்தோர் தயக்கம் காரணமாக மலேசிய தடுப்பூசி பதிவு மந்தம்

2 mins read

மலே­சி­யா­வில் தடுப்­பூசி போடும் நட­வ­டிக்­கை­யின் இரண்­டாம் கட்­டம் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலை­யில் அங்­குள்ள மூத்த குடி­மக்­க­ளி­டம் அதற்­கான வர­வேற்பு எதிர்­பார்க்கப்பட்ட அள­வில் இல்லை என செய்தி வெளியாகியுள்ளது.

கொவிட்-19 தடுப்­பூசி மருந்­து­க­ளின் முதல் தொகுதி வந்­தது முதல் ஒரு மாத காலத்­திற்­கும் மேலாக 500,000 முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளுக்கு அந்த மருந்து செலுத்­தப்­பட்டு வரு­கிறது.

அடுத்த கட்­ட­மாக ஏப்­ரல் முதல் ஆகஸ்ட் வரை 60 வய­தும் அதற்கு மேற்­பட்ட வய­தும் உடைய மூத்த குடி­மக்­க­ளுக்­குத் தடுப்­பூ­சி போடத் திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது. அந்த இரண்­டாம் கட்­டம் நெருங்கி வரும் நிலை­யில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தற்­குப் பதிவு செய்­து­கொள்ள மூத்­தோர் தயக்­கம் காட்டி வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மலே­சி­யா­வில் சுமார் 9.4 மில்­லி­யன் மூத்த குடி­மக்­கள் உள்­ள­னர். மொத்த மக்­கள்­தொ­கை­யில் இவர்­க­ளின் விகி­தம் கிட்­டத்­தட்ட 30 விழுக்­காடு. கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கக் கூடிய அபா­யம் அதி­கம் என்­ப­தால் இரண்­டாம் கட்ட தடுப்­பூ­சித் திட்­டத்­தில் இவர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­பட்டு உள்­ளது.

இதற்­கான பதிவை கைபே­சிச் செயலி வழி­யா­க­வும் இணை­யம் வழி­யா­க­வும் செய்­து­கொள்­ள­லாம். ஆனால் போது­மான இணைய வசதி இல்­லா­த­தும் எப்­ப­டிப் பதிவு செய்­வது என்று தெரி­யா­த­ நி­லை­யும் பதி­வில் சுணக்­கத்தை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன.

குறிப்­பாக, மிக­வும் முன்­னே­றிய மாநி­ல­மான சிலாங்­கூ­ரில் உள்ள 90 விழுக்­காடு மூத்த குடி­மக்­கள் இன்­னும் தடுப்­பூ­சிக்­குப் பதிவு செய்­து­கொள்­ள­வில்லை என இரு நாட்­க­ளுக்கு முன்­னர் தெரி­விக்­கப்­பட்­டது.

இருப்­பி­னும் பதி­வுக்கு முன்­வ­ரு­வோ­ரும் உள்­ள­னர். அவர்­களில் ஒரு­வ­ரான குமா­ர­சாமி சுப்­பையா, 74, என்­னும் சிலாங்­கூர் குடி­யி­ருப்­பா­ளர், பயத்­து­டன் வாழ விரும்­ப­வில்லை என்­ப­தால் தடுப்­பூ­சிக்­குப் பதிவு செய்­து­கொண்­ட­தாக நேற்று முன்­தி­னம் 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தி­யா­ள­ரி­டம் கூறி­னார்.

தடுப்­பூ­சி­யால் ஏற்­ப­டக்­கூ­டிய பக்க விளை­வு­கள் குறித்து பயப்­ப­டு­வ­தால் பெரும்­பா­லான மூத்த குடி­மக்­கள் அதற்­கா­கப் பதி­வு­செய்­து­கொள்­ள­வில்லை என கூறப்­ப­டு­கிறது.

அவர்­கள் முன்­வ­ரா­த­பட்­சத்­தில் பொரு­ளி­யல் முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் இரண்­டாம்­கட்ட தடுப்­பூ­சித் திட்­டத்­தில் சேர்த்­துக்­கொள்­ளப்­பட உள்­ள­தாகத் தகவல் வெளியாகி உள்ளது.

உற்­பத்தி, கட்­டு­மா­னம், விமா­னப் போக்­கு

­வ­ரத்து, எண்­ணெய் மற்­றும் எரி­வாயு போன்ற பொரு­ளி­ய­லுக்­குத் துணை­பு­ரி­யும் துறை­க­ளின் ஊழி­யர்­க­ளுக்கு ஏப்­ரல் மாதத்­தில் தடுப்­பூசி போட முன்­னு­ரிமை அளிக்­கப்­ப­டக்­கூ­டும் என 'கோட்­புளூ' என்­னும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­யின் இணைய வாசல் குறிப்­பிட்­டுள்­ளது.