ஒவ்வொரு நாளும் அதிக தொற்று: தடுப்பூசி போடுவதைத் தீவிரப்படுத்துகிறது இந்தியா

இந்­தி­யா­வில் கிரு­மிப் பர­வல் நில­வ­ரம் நேற்­றும் ஒரு புதிய உச்­சத்­தைத் தொட்­டது. ஒரே நாளில் 59,118 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தன் மூலம் ஐந்து மாதங்­களில் ஆக அதிக எண்­ணிக்­கை­யாக அது ஆகி­விட்­டது. இவர்­க­ளை­யும் சேர்த்து இந்­தியா முழு­வ­தும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 11.85 மில்­லி­ய­னாகி விட்­ட­தாக இந்­திய சுகா­தார அமைச்­சின் தர­வு­கள் தெரி­வித்­தன. மேலும் புதி­தாக 257 பேர் கிரு­மித்­தொற்­றுக்­குப் பலி­யா­ன­தைத் தொடர்ந்து அங்கு இது­வரை மாண்­டோ­ரின் எண்­ணிக்கை 160,949 ஆக அதி­ க­ரித்­து­விட்­டது.

கடந்த ஒருவார கால­மாக ஒவ்­வொரு நாளும் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­ப­டு­வோர் எண்­ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரு­வ­தா­ல் தடுப்­பூசி போடும் நட­வ­டிக்­கையை தீவி­ரப்­ப­டுத்த வேண்­டிய கட்­டா­யத்­தில் இந்­தியா உள்­ளது.

அங்கு இது­வரை 55 மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் போடப்­பட்டு உள்­ளது. இது அமெ­ரிக்கா, பிரே­சி­லுக்கு அடுத்த பெரிய எண்­ணிக்கை. ஆயி­னும் 1.35 பில்­லி­யன் மக்­கள்­தொ­கைக்கு இந்த எண்­ணிக்கை மிக­வும் குறைவு என கூறப்படுகிறது. எனவே ஏப்­ரல் 1ஆம் தேதி முதல் 45 வய­துக்கு மேற்­பட்­டோ­ருக்கு தடுப்­பூசி போடும் நட­வ­டிக்­கையை வேக­மா­கச் செயல்­ப­டுத்­தும் பணி­யில் இந்­தியா ஈடு­பட்டு உள்­ளது.

இதற்­கி­டையே, இந்­தி­யா­வின் 2வது கட்ட கிரு­மிப் பர­வல் சுமார் 100 நாள்­க­ளுக்கு நீடிக்­கும் என்­றும் ஏப்­ரல் மாதம் உச்­சத்­தைத் தொடும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்­தி­யா­வின் ஆராய்ச்சி அறிக்கை கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!