இவ்வாண்டு மலேசியாவில் நடைபெற இருக்கும் தேர்தலில் பாஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதுதான் சிறந்த உத்தியாகும் என்று அம்னோ கட்சியின் மூன்று பிரிவுகள் தெரிவித்துள்ளன.
முன்பு அம்னோவும் பாஸ் கட்சியும் அரசியல் எதிரிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் கட்சிகளுடனான கூட்டணியை அம்னோவின் இளையர், மகளிர், இளம் பெண்கள் பிரிவுகள் நிராகரித்துள்ளன.
அம்னோவுடன் கூட்டணி அமைக்க கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் முயல்வதாகவும் அதை ஏற்கக்கூடாது என்றும் அம்னோ கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
பிரதமராகும் வாய்ப்பை வலுப்படுத்த அன்வார் அம்னோவுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்வதாக அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
முக்கியமாக, மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினின் பெர்சத்து கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

